வனிதா வாயில.. அதென்ன.. உத்துப் பார்த்து உவ்வே சொல்லும் ரசிகர்கள்.. செம!
சென்னை: கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு குத்தாட்டம் போட்ட வனிதாவின் போட்டோக்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவர் உதட்டில் போட்டிருந்த லிப்ஸ்டிகை பார்த்து புலம்பி வருகின்றனர் .
எப்படித்தான் இவருக்கு மட்டும் இப்படி எல்லாம் தோனுதோ என பார்க்கும் ரசிகர்கள் எல்லோரும் பதறிப்போய் இருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சியில் மூலம் பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கை மாறி இருப்பது போல வனிதாவின் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிட்டது .

செம சர்ச்சை
இந்த டிவியில் இவர் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் பெரும் சர்ச்சைக்குள்ளான நபராக இருந்தாலும் இவரது திறமையை விஜய்டிவி நன்றாக பயன்படுத்தி இவரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது .இவர் இதற்கு முன்பு கணவர்களுடனும் அவருடைய அப்பா உடனும் குடும்பத்தகராறு தெரு வரைக்கும் வந்து ரொம்பவே பிரபலம் ஆகி இருந்தாலும் டிவி சேனலில் இவருடைய திறமையையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.

பிக் பாஸ் பிரபலம்
முதலில் இந்த விஜய் டிவியில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுவிட்டார். இவருக்கு இப்படியும் ஒரு திறமை இருக்கிறது என்பதையே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் புரிந்து கொண்டனர் .அதற்குப்பிறகுதான் தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஓபன் பண்ணி அதிலும் தனது சமையல் திறமையை வெளிக்காட்டி கொண்டிருக்கிறார் .

செம வைரல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வைரலாக விட்டார் .பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சுபாவத்தை கொஞ்சம் கூட நடிப்பு இல்லாமல் முழுமையாக காட்டி பல பேர் வயித்தெரிச்சலை சம்பாதித்து இவரைக் அடிக்கடி கலாய்ச்சி கழுவி கழுவி ஊற்றி வந்தாலும் இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் விஜய் டிவி இவருக்கு அடைக்கலம் கொடுத்து விட்டது .

பிக் பாஸ் ஜோடி
அதனால் தான் தற்போது பல நிகழ்ச்சிகளில் இவர் நடுவராகவும் துண்டுகளாகவும் கன்டஸ்டன்டாகவும் மீண்டும் களம் இறங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டாலும் இதில் கலந்து கொண்ட கன்டஸ்டன்ட் களை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி வருகிறார்கள் .விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த குக் வித் கோமாளியும் முடிவடைந்து விட்டது .

டான்ஸ் டான்ஸ்
தற்போது முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியும் நடைபெறும் முடிவடையும் நேரத்தை நெருங்கிவிட்டதால் புதியதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடிகள் டான்ஸ் ஆட வைத்து சோ காட்ட ஆரம்பித்துவிட்டனர் .அதுவும் இதில் ஒவ்வொரு சீசனிலும் பாப்புலராக இருந்தவர்களை இதில் ஆட வைத்ததும் மீண்டும் விஜய் டிவி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது .இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகி வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் வனிதா வெளியிட்ட போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

எப்பவும் தனி ரகம்
எப்போதுமே நான் தனிரகம் என்னுடைய ஸ்டைல யாராலும் பின்பற்ற முடியாது நான் யாரையும் மாதிரி இருக்க மாட்டேன் என தன்னுடைய இடத்தை கேரக்டரை வரும் வனிதா தற்போது ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் கையில் துப்பாக்கியை பிடித்தபடி கலக்கலாக குத்தாட்டம் போட்ட போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார் .இவர் இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடப் போகிறார் என பலருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த மாதிரி கெட்டப்பில் இவர் வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அந்த வாயில என்ன
உடைக்கும் அவர் போட்டிருக்கும் மேக்கப்பிற்க்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லாமல் வேற லெவலில் ஷாக்காக இருக்கிறது .பார்ப்பவர்கள் பார்த்ததும் ப்பா......என்ன இப்படி என கூறும் வகையில் இவர் மேக்கப் போட்டுக்கொண்டு அதுவும் அந்த கிரீன் கலர் லிப்ஸ்டிக் நெட்டிசன்கள் கலாப்பதற்கு ஏதுவாக செமையாக போட்டிருக்கிறார். இந்த போட்டோவை இவர் அப்லோட் பண்ணுன சிறிது நேரத்திற்குள் நெட்டிசன்கள் இதைப்பார்த்து வகைவகையாக கலாய்த்து வருகின்றனர் .

செம ஆச்சரியம்
தங்களால் இந்த அளவிற்கு கலாய்க்க முடியுமா என கமெண்ட் போட்டு அவர்களே திரும்பிப் பார்க்கும்போது ஆச்சரியப்படுவார்கள் அந்த அளவிற்கு கலாய்ச்சி வருகின்றனர். இவருடைய போட்டோஸ்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .ஆனால் இவருடைய ரசிகர்கள் அவர் யாரையும் காப்பி அடிக்காமல் தன்னுடைய ஸ்டைலில் இருக்கிறார் .பார்க்கிறவர்கள் இஷ்டம் இருந்தால் பாருங்கள் இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இந்த மாதிரி யாரையும் திட்டாதீர்கள் அதற்கு உங்களுக்கு உரிமையும் இல்லை என இவருக்காக சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications