பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலா- அபிக்கு காதலா?.. வனிதா போட்ட மோசமான எமோஜி!.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலாஜிக்கும் அபிராமிக்கும் இடையே உள்ள கிசுகிசு குறித்து நடிகை வனிதா விஜயகுமார் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வனிதா விஜயகுமார் இருந்த வரை ஷோ சூடுபிடித்தது. மக்களும் பார்த்தார்கள். ஆனால் எப்போது வனிதா பிக்பாஸ் வீட்டை காலி செய்து கொண்டு வந்தாரோ அன்றிலிருந்து பிக்பாஸ் அல்டிமேட் போர் அடிப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த கையோடு டிவி தொலைகாட்சிக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் கமல்ஹாசன் விக்ரம் 2 படத்திற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ளார்.

வனிதா விஜயகுமார்
ஆனால் அந்த படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர். அவர் நினைத்தால் நேரம் ஒதுக்க முடியும். இந்த நிகழ்ச்சி போகும் பாதை சரியில்லை என்பதால் அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். அதுதான் உண்மை என வனிதா விஜயகுமார் பரபரப்பான பகீர் தகவலை தெரிவித்திருந்தார்.

பாலா- அபிராமி
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளத்தில் பேசும் பொருளாக இருப்பது பாலாஜி மற்றும் அபிராமி இடையேயான கிசுகிசுதான். இவர்கள் இருவரும் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார்களாம். இவர்கள் இருவரும் புகைப்பிடிக்கும் அறையில் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அதை எடிட் செய்துவிட்டார்கள் என்றும் சர்ச்சை எழுந்தது.

ட்விட்டர் பக்கம்
இந்த விவகாரத்தை முதலில் கொளுத்தி போட்டதே வனிதாதான் என்பதால் அவரிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் உங்களை ஏமாற்றமடைய செய்ததற்கு சாரி. அவர்கள் இருவருக்கும் உண்மையான காதல் இல்லை என பதில் அளித்துள்ளார்.

வனிதாவிடம் ரசிகர் கேள்வி
அதற்கு வனிதாவிடம் ரசிகர் ஒருவர், அவர்கள் இருவருக்கும் உண்மையான காதல் இல்லை என்றால் என்ன அர்த்தம் என கேட்டுள்ளார். அதற்கு வனிதா நாயின் புகைப்படத்தையும் ஹார்ட் சிம்பலையும் பதிவிட்டு வேறு என்னத்த சொல்ல என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications