என்னாது விக்ரம் 2வா?.. அதெல்லாம் சும்மாங்க.. கமல் வெளியேறியதற்கு காரணம் வேற!.. பகீர் கிளப்பும் வனிதா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல் வெளியேறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து வனிதா விஜயகுமார் தற்போது வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கெனவே 5 சீசன்கள் வரை சென்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் ஆரம்பத்திலிருந்தே தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து எப்படி போட்டியாளர்கள் குறித்து ஒரு முடிவுக்கு வருவது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில்தான் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

14 போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் 7 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார், சுஜா வருணி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அது போல் ஆண்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஷாரிக் , அபினய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் நுழைந்துள்ளார்.

வார இறுதி நாட்களில் கமல்
இந்த நிலையில் கமல் வார இறுதி நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதனால் வார இறுதி நாட்களில் அவரது நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் 5 சீசனின் போது கொரோனாவால் கமல்ஹாசன் பாதிக்கப்பட்டதால் வார இறுதி நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

விக்ரம் 2
இந்த நிலையில் விக்ரம் 2 பட வேலைகளில் இறங்குவதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் வெளியேறியதால் இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸை விட்டு வெளியேறிய கமல்
கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்டை விட்டு விலகிய நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு நடிகை வனிதாவும் வெளியேறினார். அவர் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறுகையில் விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே கமல்ஹாசன்தான். அப்படியிருக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியாதா என்ன?

அவர் பாட்டுக்கு போனால் என்ன அர்த்தம்
அதிகபட்சம் 3 முதல் 4 நாட்கள் மட்டுமே அவருக்கு ஷூட்டிங்கிற்கு நாள் எடுக்கும். அதற்கு போய் ஏன் நிகழ்ச்சியை விட்டு விலக வேண்டும். நான் இந்த நிகழ்ச்சியில் இல்லை என கூறி அவர் பாட்டுக்கு கிளம்பி போனால் என்ன அர்த்தம். அவருக்கே இந்த நிகழ்ச்சி தவறாக செல்கிறது என்பது தெரிந்துள்ளது. அதனால்தான் விலகியுள்ளார்.

அல்டிமேட் நிகழ்ச்சி மீது குற்றம்சாட்டிய வனிதா
இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதமே சரியில்லை. இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால்தான் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் சரியில்லை என வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தயாரிப்பு குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications