• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூப்பிட்டு வச்சு வனிதாவை இப்படி பண்ணிட்டீங்களே!

|

சென்னை: வனிதா.. இந்த பெயரை கேட்டாலே ஐயோ என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களில் வாயில் விழுந்து கொண்டிருக்கிறார்.

காதலில் தோல்வி என்றாலும் வாழ்க்கையில் தோல்வி பெறவில்லை என்று போல்டாக தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரை இந்த விஜய் டிவி கூப்பிட்டு வச்சி ஷோ மூலமாக எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தி விட்டது.

இந்த ப்ரோமோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. சினிமாக்களில் ஒரு காலத்தில் ஹீரோயினியாக கலக்கிக் கொண்டிருந்தவர்.தற்போது இணையதளங்களில் தெரியாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ரொம்பவும் பாப்புலர் ஆக வருபவர்தான் இந்த வனிதா.

சீ போங்க ரம்யா.. இந்த மாதிரி பண்ணாதீங்க.. முகம் சுளிக்க வச்சிட்டாரே இப்படி!

 பீட்டர் பால் மேட்டர்

பீட்டர் பால் மேட்டர்

இவர் நடிகர் விஜயகுமாரின் மகளாக இருந்தாலும் பல வருடங்களாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வீட்டுக்கு தான் நடையாக நடந்து கொண்டிருக்கிறார். அவருடைய ராசியா அல்லது நேரமா என்று தெரியவில்லை அவர் நம்புபவர்கள் எல்லாருமே அவரை ஏமாற்றி விட்டு தான் இருக்கிறார்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவருக்கும் பீட்டர் பாலுக்கும் காதல் திருமணம் என்று வரும்போது பெரும் சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன.

 காதல் கல்யாணம்

காதல் கல்யாணம்

எவ்வளவு பிரச்சனையில் வந்தாலும் அசால்டாக சமாளித்து விரும்பியவரை மணம் முடிப்பேன் என்று இந்த கோரானா காலகட்டத்திலும் விமர்சனமாக திருமணத்தை முடித்து சாதித்து இருந்தார். அதன் பிறகும் காதல் தம்பதிகளாக புதுமண ஜோடிகளாக கலக்கிக் கொண்டிருந்த இவர்கள் அடிக்கடி போட்டோ சூட்டும் வீடியோக்களும் போட்டு இவரை எதிர்த்தவர்களை வெறுப்பேற்றி கொண்டிருந்தனர்.

 கோவாவில் நடந்தது என்ன

கோவாவில் நடந்தது என்ன

கோவாவிற்கு சென்று இவர்கள் நடிகை நயன்தாரா ரேஞ்சுக்கு போட்டோக்களாக எடுத்து குவிந்திருந்தனர் .ஆனால் அந்த கோவாவிலிருந்து தான் இவர்களது வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. கோவா சென்று வந்த பிறகு இவர் பீட்டர் பாலை வீட்டிலிருந்து அடித்து துரத்தி விட்டார் என்று பல்வேறு தகவல்கள் கசிந்து வந்தன .அந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராமில் நான் அடித்து துரத்த வில்லை ஆனால் இருவரும் பிரிந்துவிட்டோம் நான் பெரும் மன வருத்தத்தில் இருக்கிறேன்.

காயப்படுத்தாதீங்க

காயப்படுத்தாதீங்க

தயவு செய்து என்னை யாரும் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று பக்கம் பக்கமாக எழுதி போஸ்ட் போட்டிருந்தார் .இதை வைத்து பல மீன்ஸ்களும் பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் முதலில் எதிர்த்தவர்கள் கூட இப்போது ஆனந்தமாக கொண்டாடுகின்றனர் .இது இப்படித்தான் நடக்கும் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறிவருகின்றனர்.

ஷகீலாவுடன்

ஷகீலாவுடன்

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் மீண்டும் நான் வருவேன் என்று சில இன்டர்வியூக்களிலும் இவர் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். நடிகை ஷகிலா உடன் இவர் கொடுத்திருந்த இன்டர்வியூ வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இவரை விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கூப்பிட்டு வைத்து எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப் படுத்தி இருக்கிறார்கள்.

 ஓட்டிய விஜய் டிவி

ஓட்டிய விஜய் டிவி

இந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி ஒரு காமெடி ஷோ வாக இருந்தாலும் அதில் இவரை கெஸ்ட்டாக உட்காரவைத்து பாலா இவரை வகைவகையாக கலாய்த்து எடுத்துக்கொண்டிருக்கிறார். இதில் இவரது பர்சனல் லைப்களை பற்றியே இவர்கள் கலாய்ப்பது கோபத்தின் உச்சிக்கே சென்று இதுதான் உங்களது வேலையா உங்களுக்கு வேற கண்டன்ட்டே கிடைக்கவில்லையா.

 இப்படி பண்ணலாமா

இப்படி பண்ணலாமா

இப்படித்தான் ஒருவரை கலாய்ச்சு நீங்க கேவலப்படுத்துவீர்களா என்று படுபயங்கரமாக கோபத்தில் புயலாக மாறி இருக்கிறார். இந்தப் ப்ரோமோவை பார்த்து பல நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர் .இதுதான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இன்னும் என்னெல்லாம் இந்த பூமி பாக்கப் போகிறதோ.. பூமித்தாயே.. இதையெல்லாம் பொறுத்துப் போம்மா!

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Actress Vanitha Vijayakumar was trolled by Vijay tv in Promo.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X