World cup cricket 2019:நாங்க புதுசா சேர்ந்துக்கிட்ட ஜோடிதானுங்க..கிரிக்கெட் பார்க்க வந்திருக்கோமுங்க
சென்னை கிரிக்கெட் ஜூரம் நாட்டில் யாரையும் விடலை போல. இங்க பாருங்க யாரெல்லாம் போய் கிரிக்கெட் பார்க்க இங்கிலாந்தில் குவிந்து கொண்டுள்ளனர் என்று.
நடிகை ராதிகா தனது குடும்பத்துடன் போய் கிரிக்கெட் பார்த்தார். இந்தியா ஆடுவதை தனது கணவர், மகன் ராகுலுடன் இணைந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தார். இந்த நிலையில் அடுத்து ஒரு குரூப் கிளம்பிப் போயுள்ளது.
இந்த ட்ரூப்பில் முழுக்க முழுக்க பெண்கள்தான். அதுவும் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னிகள் நிரம்பி வழிகின்றனர் இந்த ட்ரூப்பில். இவர்கள் அத்தனை பேரும் சென்னையிலிருந்து போயுள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான்
பிர்மிங்காமில் இந்தியா இங்கிலாந்து இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதிகம் எதிர்பார்க்கும் போட்டி இது. இப்போட்டிக்காக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன், இசை அமைப்பாளர் அனிருத் அங்குத்தான முகாமிட்டு இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடந்த போது மிகவும் என்ஜாய் பண்ணி பார்த்தார்கள்.
|
பிந்து மாதவி தோழிகள்
நடிகைகள் திரிஷா, வரலட்சுமி சரத்குமார், பிந்து மாதவி போன்றோர் நல்ல தோழிகளும் கூட. திரைக்கு வெளியே இணைந்து நட்பு பாராட்டி வருபவர்கள். இந்த தோழிகள்தான் இப்போது கேங்காக கிளம்பி பிர்மிங்காம் நகருக்குப் போயுள்ளனர். அங்குதான் இந்தியா இங்கிலாந்து இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

விமான நிலையத்தில்
பிர்மிங்காம் போய்ச் சேர்ந்ததுமே ஒரு செல்பி எடுத்தனர். அதை டிவிட்டரில் போட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். நாங்க பிர்மிங்காம் வந்து விட்டோம். விமான நிலையத்திலிருந்து செல்பி போடுகிறோம். அத்தனை பேருக்கும் முத்தங்கள் என்று கலக்கலாக போட்டுள்ளனர். அதாவது பிர்மிங்காம் விமான நிலையத்தில் செல்பி எடுத்துப் போட்டுள்ளனர்.

பர்சனல் தோழிகள்
சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளவர்கள்தான். பலரும் உலகக் கோப்பைப் போட்டிகளைப் பார்க்க இங்கிலாந்து போயுள்ளனர். போய்க் கொண்டுள்ளனர். நம்ம ஊர் சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்களும் போயுள்ளனர். இந்த நிலையில் தற்போது திரிஷா, வரலட்சுமி ஆகியோர் போயுள்ளனர்.
இந்த குரூப்பில் 3 பேரை நமக்கு நன்றாக அடையாளம் தெரிகிறது. செல்பி எடுப்பவர் பிந்து மாதவி, கீழே உட்கார்ந்திருப்பவர் வரலட்சுமி சரத்குமார், பிறகு திரிஷா. மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை. திரைத்துறை சாராத தோழிகளாக இருக்கலாம் போல.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications