வசூல் வேட்டை இது பெண்களுக்கான கேம் ஷோ!
சென்னை: சில விஷயங்களை பெண்களுக்கு என்று பிரித்து வைத்து பலரும் அழகு பார்ப்பது உண்டு. பெண்களுக்கு தனி பேருந்து, பல சலுகைகள் என்று இதை அடுக்கலாம்.
இதில் தொலைக்காட்சி நிறுவனங்களும் விதி விலக்கல்ல. பெண்களுக்கு என்று பிரத்யேகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் வைத்து அசத்தி விடுவார்கள்.
ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி, கலைஞர் டிவியின் அழகிய தமிழ் மகள் இப்படி சொல்லலாம். அந்த வரிசையில் விஜய் டிவி பெண்களுக்கான கேம் ஷோ என்று வசூல் வேட்டை நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கிறது.

குஷ்பூ நிகழ்ச்சி
ஜெயா டிவியில் முதன் முதலாக ஜாக்பாட் என்று ஒரு கேம் ஷோ நடத்தினார்கள். இதை குஷ்பூ தொகுத்து வழங்கினார்.முதன் முதலில் சின்னத் திரைக்கு இதன் மூலம்தான் குஷ்பூ வந்தார். இவர் நிகழ்ச்சியை ஒரூ டீச்சர் மாதிரி நடத்தும் அழகே தனி. அதோடு, இந்த நிகழ்ச்சியில் குஷ்பூ விதம் விதமாக டிசைன் செய்த ஜாக்கெட் அணிந்து வருவார். ஜாக்பாட் ஜாக்கெட் என்று கூட நிகழ்ச்சி பிரபல்யம் ஆனது.

கலைஞர் டிவி நிகழ்ச்சி
கலைஞர் டிவியில் அழகிய தமிழ் மகள் என்று ஒரு டாக் ஷோ நடத்தினார்கள். இதுவும் பெண்களுக்கான பிரத்யேக ஷோ.இதை நடிகை ரோகினி தொகுத்து வழங்கினார். அனைத்து மாவட்டங்களின் தலைநகரில் இந்த ஷோ நடைப்பெற்றது. நல்ல நல்ல கருத்துக்களை முன் வைத்து இந்த நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

வசூல் வேட்டை
திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணிக்கு விஜய் டிவியில் வசூல் வேட்டை நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இதில் பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.அதுவும், விஜய் டிவியின் தொகுப்பாளர்கள்,சீரியல் நடிகர்கள் என்று இல்லாமல், வெளியாட்கள் கலந்து கொள்ளும் பெண்களுக்கான கேம் ஷோ.

விளையாட்டுக்கள் பல
பல விதமான விளையாட்டுகளை இரண்டு அணிகளை வைத்து நடத்துகிறார்கள் நிகழ்ச்சியை அசார் மற்றும் சித்ரா தொகுத்து வழங்குகிறார்கள். தரை லோக்கல், தெறி பேபீஸ் என்று அணிகளுக்கு பெயர் வைத்து விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். இதில் டாஸ்க், பரிசு என்பதோடு, சிறப்பு அனுபவமாக ஒரு பிரபலத்தை போட்டியாளர் ஒருவரிடம் பேசவும் வைக்கிறார்கள். நிகழ்ச்சி பொழுது போக்காக ஜாலியாக இருக்கிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications