எங்களுக்கு தினம் தினம் படிக்கற வாத்தியார்தான் சார் வேணும்... காது வலிக்குது பாஸ்!
சென்னை: சன் டிவியில் அடுத்த சாட்டை படம் வரும் வெள்ளி புதுப்பட கொண்டாட்டத்தில் ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள். இதற்கான ப்ரோமோ கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து இன்று வரை ஒளிபரப்பாகி வருது.
ஒரு மாசமா வெள்ளி புதுப்பட கொண்டாட்டத்தில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களை அந்த மாதம் முழுவதும் பட்டியல் போட்டு ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.
அடுத்த சாட்டை படத்தில் சமுத்திர கனி பேசும், படிச்ச வாத்தியார் வேணாம் சார் எங்களுக்கு தினம் தினம் படிக்கற வாத்தியார்தான் வேணும்னு சொல்ற டயலாக் தினம் 10 முறைக்கு மேல கேட்டுட வேண்டியதா இருக்கு.

பள்ளிகள் லாக்டவுன்
இப்போ பிள்ளைகள் பள்ளிக்கூடங்களை மறந்து விளையாட்டு, டிவி பார்ப்பது என்று பொழுதைக் கழித்து வருகின்றனர். அதிலும் 10ம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் தங்களுக்கு என்றைக்கு தேர்வு என்று தெரியாமலே பதற்றத்தில் அவ்வப்போது படிப்பது என்று இருக்கும் நிலை.

வாத்தியார்கள் எரிச்சல்
அடுத்த சாட்டை என்று ஒரு படம்.. அதுபள்ளிக்கூடம் ...மாணவர்கள் பற்றின கதை என்று இருந்தால் இருக்கட்டும். அதுக்குன்னு கடந்த ஒரு மாதமாக தினம் தினம் இந்த படத்தோட ப்ரோமோ பள்ளி ஆசிரியர்களை எரிச்சல் அடைய வைத்து இருக்கிறது.படிச்ச வாத்தியர் வேணாம்.. எங்களுக்கு தினம் தினம் படிக்கற வாத்தியார்தான் வேணும்னு எந்தவிதத்தில் கேட்கறீங்க என்று கூட வாத்தியார்கள் போனில் வாக்குவாதம் நடத்தி வருகிறார்கள். சில வாத்தியர்களை இந்த டயலாக் எரிச்சல் அடைய வைத்து இருக்கிறது.

அடுத்த சாட்டை
சாட்டை என்று பள்ளியை வைத்து இரு படம் எடுத்து வெளியிட்டார்கள். அந்த படம் கொஞ்சம் வெற்றி பெற்றது. பல வருடங்கள் கழித்து அதே கான்செப்டை வச்சு அடுத்த சாட்டை என்று ஒரு படத்தை எடுத்து அண்மையில் வெளியிட்டார்கள். படம் ஃபெயிலியர்தான்.... இதிலும் சமுத்திரக்கனிதான் படத்தில் புத்திமதி சொல்லும் கதாபாத்திரத்தில் வருகிறார்.

போதும் கனி சார்
ஐயோ புத்திமதி போதும் கனி சார் என்று சொல்லும் அளவுக்கு படிச்ச வாத்தியார் வேணாம் சார்.. எங்களுக்கு தினம் தினம் படிக்கற வாத்தியார்தான் சார் வேணும்னு சொல்ற டயலாக் கடந்த ஒரு மாசமா சன் டிவி, கே டிவி, ஆதித்யா டிவி என்று மாறி பாரி கேட்டு காது புளிச்சு போச்சு சார். வர வெள்ளிக்கிழமை வெள்ளி புதுப்பட கொண்டாட்டத்தில் இந்த அடுத்த சாட்டை படத்தை பார்க்க முடியுமான்னே தெரியலை...போதும்டா சாமி!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications