Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்பவம் சிரிச்ச முகமாவே இருப்பியே சித்து.. கதறி அழுத வெங்கட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதுக்கு சித்து இப்படி பண்ணுன.. கடைசியா ஒரு தடவை பார்க்கக் கூட முடியாமல் போய்விட்டதே என்று கதறி அழுதுள்ளார் நடிகர் வெங்கட்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக முல்லை கதாபாத்திரத்தில் மக்களிடம் அவர்கள் வீட்டு பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தவர் விஜே சித்ரா.

தற்போது திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரைத்துறையில் அவர்களுடன் வேலை செய்த நடிகர்களையும் பெரிதும் பாதித்திருக்கிறது.

ஜீவா சோகம்

ஜீவா சோகம்

இவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் அவருடன் அந்த சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த வெங்கட் கதறி அழுது உருக்கமான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோக்களை பார்த்ததும் ரசிகர்களும் தங்களது கவலைகளை கமெண்ட்டு களாக போட்டு வருகிறார்கள்.

என்னால் ஜீரணிக்க முடியலை

என்னால் ஜீரணிக்க முடியலை

அந்த மாதிரி தான் தற்போது இந்த செய்தியை தண்ணால் ஜீரணிக்க முடியவில்லை நம்ப முடியவில்லை இது ஒரு கனவுபோல இருக்கிறது கனவாகவே இருந்து விட்டால் ரொம்பவும் நல்லா இருக்கும் என்று கதறி அழுதிருக்கிறார் .அதுவும் ஏன் இப்படி பண்ணினா என்று அவர் தனது வேதனையையும் தெரிவித்திருக்கிறார்.

மச்சான்

மச்சான்

இரண்டு வருடங்களாக இந்த சீரியலில் இவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக தான் நடித்து வந்திருக்கின்றனர். தற்போது இவர் இல்லை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சீரியல் தொடங்கும் நேரத்தில் சித்து இவரிடம் சொன்ன வார்த்தைகள் இன்னும் தன்னுடைய காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .

மச்சான் விட்ராதே

மச்சான் விட்ராதே

மச்சான் நம்மளுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு இதை பிடித்துக் கொண்டு முன்னுக்கு வந்துடனும் வாழ்ந்து காட்டனும் என்று பாசிட்டிவாக கூறினாராம். அந்த அளவிற்கு எப்போதுமே பாசிட்டிவாக இருக்கும் இவர் தான் மட்டும் ஜாலியாக இல்லாமல் அவர் இருக்கும் இடத்தில் இருப்பவர்களையும் சந்தோசமாக மாற்றி விடுவர் விடுபவர் என்று கூறியிருக்கிறார்.

எப்பவும் சிரிச்ச முகம்தான்

எப்பவும் சிரிச்ச முகம்தான்

அதுமட்டுமல்ல சித்து எப்போவுமே ஜாலியாக சிரித்துக் கொண்டே இருப்பவர் அவருடைய சிரித்த முகம் மட்டும் தான் எனது கண்களுக்குள் இருக்கிறது. என்னால் கடைசியாக அவரது முகத்தை கூட பார்க்க முடியவில்லை .நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன் என்று தன்னுடைய இயலாமையும் கூறியிருக்கிறார். அவருடைய பெற்றோர்களுக்கு எப்படி தான் ஆறுதல் கூற போகிறோம் என்று தெரியவில்லை.

எங்களுக்கு ஆறுதல் கிடைக்காதே

எங்களுக்கு ஆறுதல் கிடைக்காதே

அதைவிடவும் எங்களுக்கு எப்படி தான் ஆறுதல் கிடைக்க போகிறது என்றே தெரியவில்லை. இந்த சீரியலில் முல்லை கேரக்டருக்கு பெரிய வரவேற்பு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. எல்லாமே அவருக்கு தெரியும் தெரிந்தும் இந்த மாதிரி எப்படி பண்ணினார் என்று தான் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். சித்து எப்பவுமே சூட்டிங்கில் ஜாலியாக அனைவரையும் கலாய்த்துக் கொண்டு இருப்பவர்.

பெரும் சோகம்

பெரும் சோகம்

இவர்களுடன் அடிக்கடி வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் . அந்த மாதிரிதான் கடைசியாக வெளியிட்ட வீடியோக்கள் கூட தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் வெங்கட் மற்றும் இந்த சீரியலில் புதிதாக அறிமுகமான வைஷாலினி அனைவரும் சேர்ந்து ஜாலியாக பூனை ஒவ்வொரு மூடுலிலும் எப்படி சத்தம் போடும் என்று ஒவ்வொரு சிம்பிளாக சித்து கேட்கிறார்.

நிலையில்லாத வாழ்க்கை

நிலையில்லாத வாழ்க்கை

அதற்கு வெங்கட் மற்றும் வைஷாலினி இருவரும் சத்தம்போட்டு காண்பித்தனர் .அந்த வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது. என்னதான் அனைவரும் ஆறுதல் சொன்னாலும் யாராலயும் இவர் இப்படி பண்ணி விட்டார் என்பதை தான் நம்ப முடியாமல் தான் அனைவரும் தவித்து வருகின்றனர் . ஆனாலும் அடுத்த நிமிஷம் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையாகத்தான் இருக்கிறது.

சந்தோஷமா வாழுங்க

சந்தோஷமா வாழுங்க

அதனால் வாழ்கிற வரைக்கும் சண்டை சச்சரவு கோபம் வெறுப்பு எதையும் காட்டாமல் நிம்மதியாக சந்தோஷமாக அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு சென்று விட வேண்டும் என்று வெங்கட் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சித்துவும் அப்படித்தான் அனைவரையும் சந்தோசமாகவே சிரிக்க வைத்து விட்டு சிரித்த முகமாகவே அனைவரின் மனதிலும் நிறைந்து சென்றுவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+