ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. இப்படி பண்ணுவார் என்று நினைக்கல! வெங்கடேஷ் பட் எமோஷனல்
சென்னை: வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இப்போது டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தான் ஆரம்ப காலகட்டத்தில் சமையல் கலைஞர் ஆவதற்கு முன்பு ட்ரைனியாக இருக்கும்போது ரஜினிகாந்த் செய்த செயல் குறித்து எமோஷனலாக வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.
அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மற்றும் சமையல் செய்து அசத்திய வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் 20 வருடங்களுக்கு மேலாக பயணித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் சமையல் செய்யும் அழகை பார்த்து ரசித்த ரசிகர்கள் பிறகு இவர் கலகலப்பான நடுவராக செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் நடுவராக இருந்தார். ஆனாலும் அவர் நிகழ்ச்சியில் கோமாளிகளை அடிக்கிறார், அடிக்கடி திட்டுகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் வந்தாலும் அதை அவர் கண்டு கொள்வது கிடையாது. இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வெங்கடேஷ் பட் தன்னைப் பற்றி வரும் நெகடிவ் கமாண்டுகளுக்கு அடிக்கடி பதிலடி கொடுத்தும் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென்று ஐந்தாவது சீசனில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் மே 19ஆம் தேதி சன் டிவியில் மதியம் 12:30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் நடிகர் சித்ரா லக்ஷ்மனுடன் கலந்துரையாடி இருக்கிறார்.
அதில் நான் ஆரம்ப காலகட்டத்தில் செஃப் ஆகுவதற்கு முன்பு டிரைனியாக இருந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்த செயலை என்னால் மறக்கவே முடியாது நான் ஒரு ஹோட்டலில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு வந்திருந்த ரஜினிகாந்த் சாப்பிட வந்திருக்கிறார். அப்போது அங்கு நான் வேகமாக தட்டுகளை கழுவிக் கொண்டிருந்தேன்.
அதை பார்த்த ரஜினிகாந்த் நீ ஒரு நாள் பெரிய ஆளாக வருவாய் என்று கூறிவிட்டு சென்றார். அந்த நேரத்தில் அவர் எதற்காக சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு தெய்வ கடாட்சம் இப்போது நான் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்றால் அன்று அவர் சொன்ன வார்த்தை தான் எனக்கு உத்வேகம் அளித்ததாக இருந்தது. ஆரம்பத்தில் நான் பார்த்த வேலையில் இருந்து போய்விடலாம் என்று எத்தனை முறையோ நினைத்து இருக்கிறேன்.
செஃப்பாக இன்று நான் எல்லோருக்கும் பிரபலமாக இருந்தாலும் ஆரம்பத்தில் அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறேன். அது எனக்கு மட்டுமல்ல என்னை போல இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த பலரும் பட்டதுதான். ஆனால் அது நமக்கு வரும்போது தானே பெரிய கஷ்டமாகவும் வேதனையாகவும் இருக்கும். அந்த மாதிரி நான் வாழ்க்கையில் வெறுத்துப் போய் இருந்த நேரங்களில் எல்லாம் ரஜினி சாரின் அறிவுரைகளை கேட்டு விடுவேன்.
அவருடைய படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுபோல முதல் முறை அவர் என்னிடம் பேசியதற்கு பிறகு ரஜினி சார் நான் எந்த ஹோட்டலில் இருக்கிறேனோ அங்கு போன் பண்ணி கேட்டு அங்கு வந்து சாப்பிடுவார். அவருடைய டேபிளை அட்டென்ட் பண்ணுவது நான்தான். இப்படி எல்லாம் ரஜினி சார் பண்ணுவார் என்று நினைக்கவே இல்ல.
அவர் எவ்வளவோ பெரிய நடிகராக இருக்கிறார். அவருக்கென்று தமிழ்நாட்டில் அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் நான் இருக்கிறேனா என்று கேட்டு ஹோட்டலுக்கு சாப்பிட வருவது என எனக்கு பெரிய பாக்கியமாக இருந்தது என்று எமோஷனலாக அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications