காலை 8 மணிக்கு சன் டிவி பாருங்க.. உங்களை ஏமாற்ற மாட்டேன்.. வெங்கடேஷ் பட் உருக்கம்
சென்னை: காலை 8 மணிக்கு சன் டிவி பாருங்கள், நான் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் அக்கார்டு ஹோட்டல் சிஇஓவும் குக் வித் கோமாளியின் முன்னாள் நடுவருமான வெங்கடேஷ் பட் விளக்கமளித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5 நேற்று முதல் தொடங்கியது. இதுவரை 4 நிகழ்ச்சிகளை அக்கார்டு ஓட்டல் சிஇஓ வெங்கடேஷ் பட்டும் தாமோதரனும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தது.

அப்போது குக் விக் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து தானும் தாமுவும் விலகுவதாக பட் அறிவித்திருந்தார். எந்த காரணத்தையும் விளக்காமல் அவர் கூறியிருந்தது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்த்தியது.
மேலும் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் தாமுவும் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்கிறார். இதையடுத்து சொல் தவறினாலும் நட்பு மாறாது என பட் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
என்ன காரணத்திற்காக வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறார் என தெரியவில்லை. சொன்ன சொல் தவறினாலும் நட்பு மாறாது என்பதை பார்த்தால் பட்டுடன் தாமுவும் வருவதாக கூறிவிட்டு பின்னர் வரவில்லை என கூறிவிட்டார் என்றே தெரிகிறது. பட்டுக்கும் டிவி சேனலுக்கும் ஏதாவது பிரச்சினையா என்ற கேள்வி எழுந்தது.
சிங்கம் சிங்கிளாதான் வரும் என்ற ரீதியில் அடிக்கடி வீடியோக்களை போஸ்ட் செய்து கொண்டே வந்தார் பட். ஒரு முறை பட் டப்பிங் பேசுவது போல் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. மேலும் ஆரம்பிக்கலாமா என்றும் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதை கேட்ட ஒரு சில நெட்டிசன்கள், ஒரு வேளை கேட்டரிங் காலேஜை தொடங்குகிறாரோ என்றும் பதிவிட்டிருந்தனர். ஆனால் அவர் கேட்டது வேறொரு புதிய நிகழ்ச்சிக்கானது. ஜெயிலர் படத்தில் வரும் அலப்பறை கிளப்புறோம், தலைவரு நிரந்தரம் என்ற பாடல் பேக்கிரவுண்டில் ஒலித்தது.
அந்த வீடியோவில் வெங்கடேஷ் பேசியிருப்பதாவது : ஹலோ எப்படி சொல்வது என தெரியவில்லை. என்னை மிஸ் செய்வதாக நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை படிக்கும் போது நான் ரொம்ப கொடுத்து வைத்தவனாக உணர்கிறேன். கடவுள் என்னை அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார் என தோன்றுகிறது. நன்றி, என்றைக்குமே நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.
உங்களை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன். என் வாழ்க்கையின் நாடித் துடிப்பே ரசிகர்களாகிய நீங்கள்தான். இன்று முதல் காலையில் 8 மணிக்கு ஒரு சர்பிரைஸ் காத்துக்கிட்டு இருக்கிறது. சன் டிவி பாருங்கள்! உங்களுக்கு தெரியவரும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications