ஜெயலலிதா ரகசியம் சொன்னாங்க! இந்த 3 பேர் கிட்ட ஜாக்கிரதையாக இருக்கணும்! வெண்ணிறாடை மூர்த்தி ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் சில நகைச்சுவைக் கலைஞர்கள் மட்டுமே தலைமுறைகள் தாண்டி மக்களால் பேசப்படுவார்கள். அப்படி 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவைக்காகப் ரசிகர்களால் ரசிக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி*. சட்டம் படித்திருந்தாலும், அவர் சினிமாவுக்குள் வந்த பின்னணி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் அவருக்கிருந்த தனிப்பட்ட உறவு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே உள்ளது.

ஜெயலலிதாவுடனான நினைவுகள்
வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் இருந்த சில நெகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்:
வாய்ப்பு கொடுத்த ஜெயலலிதா
"ஒரு நாள் நான் ஜெயலலிதா அம்மாவை சந்திக்க சென்றபோது அவங்க என்னிடம் 'உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் எதனாலும் செஞ்சு தரேன்னு' சொன்னாங்க". அதுக்கு நான் 'எனக்கு வேற ஒன்னும் வேண்டாம் ஒரே ஒரு உதவி செஞ்சா போதும் - நான் எப்போ உங்கள பாக்கணும்னு நினைக்கிறேனோ அப்போ ஒரு மூலையில் இருந்தாவது உங்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுட்டுப் போகணும் அவ்ளோ போதும்' என்று சொன்னேன்".
"அதுக்கு அவங்க சிரிச்சிட்டாங்க. சிரிச்சிட்டு அவங்களுடைய தனிப்பட்ட போன் நம்பரை எனக்குத் தந்து 'இது என்னோட நம்பர் எதுக்கு வேணும்னாலும் போன் பண்ணுங்க'னு சொன்னாங்க". நான் அவங்க இருந்த வரைக்கும் ஒரு 20-லிருந்து 30 முறை பார்க்கப் போயிருப்பேன். அவர்களுக்குப் ஜாதகத்தில் நம்பிக்கை இருந்ததால் என்னை வரச் சொல்லிக் பேசிட்டு இருப்பாங்க.
கட்சியில் இணைப்பு
அப்போ ஒரு நாள் கூட என்கிட்ட நீங்க கட்சியில் சேருவீங்களா என்று கேட்டதே கிடையாது என்று ஜெயலலிதாவின் தனிப்பட்ட பண்பைப் பாராட்டியுள்ளார். மேலும் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசும்போது, ஒருமுறை நான் அவங்களப் பார்க்கப் போகும்போது என்னுடைய மனைவியையும் அழைத்துப்போயிருந்தேன். அப்போ என்னுடைய மனைவியிடம் அவங்க இவர் என்ன மினிஸ்டர் ஆகுவாங்கன்னு சொன்னாங்க இப்ப நான் முதல்வர் ஆகிட்டேன்'னு சொன்னாங்க.
அவங்களுடைய நினைவாற்றலைப் பார்த்தீர்களா? நான் அவங்க நடிக்கும்போது தான் அவங்க மினிஸ்டர் ஆகுவாங்கன்னு சொன்னேன் ஆனா அவங்க மறக்காம வச்சிருந்தாங்க என்று வெண்ணிற ஆடை மூர்த்தி பெருமையாக பேசியிருக்கிறார்.
மேலும் அவர் ஜெயலலிதா உதவி வேண்டுமானு கேட்டும் அதை மறுத்த காரணம் பற்றியும் பேசி இருந்தார். அதில் ஜெயலலிதா என்கிட்ட ரொம்ப அன்பா இருந்தாங்க, ஆனா நான் அவங்க கிட்ட எந்த உதவியும் கேட்டதே இல்ல. ஏன்னா எப்பவும் அரசியல்வாதி, போலீஸ், சாமியார் இவங்க மூணு பேரு கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். போலீஸ் கிட்ட நட்பா இருந்தா ஏதாவது உதவி கேட்டால் மறுக்க முடியாது. சாமியார்னா உங்க சொத்தே போயிடும் என்று வெண்ணிறாடை மூர்த்தி தன்னுடைய வழக்கமான சிரிப்போடு பேசி இருக்கிறார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமா பயணம்
1936-ம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்த சட்டம் படித்த மூர்த்தியை 1965-ல் 'வெண்ணிற ஆடை' என்ற படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து அவர் 'வெண்ணிற ஆடை மூர்த்தி' என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். உருண்டை முகத்தில் சில சேட்டை பாவங்களுடன் மாறுபட்ட சப்தங்கள் தந்து நம்மைச் சிரிக்க வைப்பதில் இவருக்குத் தனிப் பாணி உண்டு.
1970-களில் நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், 1980 மற்றும் 1990களில் கவுண்டமணி, செந்தில் அதன் பிறகு விவேக், வடிவேலு என்று அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்கள் படங்களிலும் நடித்தும் தன் நடிப்பையும் பேச வைத்தவர். ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள் எப்படி ரிட்டையர்டு ஆகுகிறார்களோ அதே போல நடிப்பிலிருந்து இப்போது ரிட்டையிட் ஆகி இருக்கிறார். ஆனாலும் சமீபத்தில் இவர் பேட்டி கொடுத்திருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications