நிரோஷாவின் படத்தை 50 முறை பார்த்த உச்ச நட்சத்திரம்! கேசட்டே தேஞ்சி போச்சு! வாயடைத்து போன ராதிகா!
சென்னை: நடிகை நிரோஷாவின் அக்னி நட்சத்திரம் படத்தை உச்ச நடிகர் ஒருவர் 50 முறை பார்த்தார் என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கை நிரோஷா. இவர் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் மிகவும் ஸ்டைலாக அழகாக நடித்திருந்தார் நிரோஷா! 80 களில் ராம்கி- நிரோஷா ஜோடியின் காம்பினேஷன் சினிமாவில் வொர்க் அவுட் ஆனது.

தமிழ் சினிமாவின் நவரச நாயகி என்ற பெயர் நிரோஷாவுக்கு உண்டு. அக்னி நட்சத்திரத்திற்கு பிறகு செந்தூரப் பூவே படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இணைந்த கைகள் படத்தில் தனது உச்சபட்ச நடிப்பை நிரோஷா வெளிப்படுத்தியிருந்தார்.
தனது 3 வயதிலேயே தந்தை எம்ஆர் ராதா நடித்த படத்தில் அவருடைய மகளாகவே நடித்திருந்தார். நடிப்பில் மட்டுமல்ல நிரோஷா படிப்பிலும் சுட்டி என்கிறார்கள். ஆனாலும் நிரோஷாவுக்கு நடிப்பதுதான் மிகவும் பிடிக்குமாம். ஆனாலும் சூரசம்ஹாரம் படத்தில் கமலுடன் அதிக முத்த காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவரது நடிப்பிற்கு அச்சாரமாக இருந்த நடிகை ராதிகா ஜீதமிழில் வீக்என்ட் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் தங்கை நிரோஷா குறித்து கூறியதாவது: நான் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். நான் அமிதாப்பின் ரசிகை. ஆனால் அவரோ என் தங்கையை மிகவும் பிடிக்கும் என கூறிய போது என் மனம் கஷ்டப்பட்டது.
அக்னி நட்சத்திரத்தில் பார்த்து நிரோஷாவை அமிதாப் வர்ணித்தார். அப்போது நிரோஷா மும்பையில் முட்டியில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வந்திருந்தார். காலில் செருப்பு கூட இல்லாமல் அமிதாப் பச்சனை பார்க்க வந்தார். என் மனதிற்குள் ரொம்ப சந்தோஷம், இத்துடன் அமிதாப் நிரோஷாவை பார்க்கவே மாட்டார்னு!
உங்களை பார்க்க என் தங்கை வந்திருக்கிறார் என்றேன். அவர் எங்கே என தேடினார் என்றார் ராதிகா. அப்போது நிரோஷா குறுக்கிட்டு, ஆனாலும் என்னை கட்டிபிடித்து நான் உன்னுடைய ரசிகன் என்றார். அது போல் நான் நடித்த அக்னி நட்சத்திரத்தை 50 முறை பார்த்துள்ளார். கேரவனில் பார்த்து பார்த்து சிடியே தேய்ந்து போனதுனு சொன்னார் என்றார் நிரோஷா.
உடனே ராதிகா தொடர்கையில் அதிலும் நிரோஷா நடிக்கும் பகுதியை மட்டும் ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டிருப்பார் என்றார். நிரோஷாவுக்கு டப்பிங் பேசியது ராதிகாதானாம். அது போல் ராதிகாவுக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும்., அதைவிட அந்த புத்தகத்தை நுகர்ந்து பார்ப்பது மிகவும் பிடிக்குமாம்.












Click it and Unblock the Notifications