செந்தாமரையின் மகளா இது? கலைஞர் வீட்டில் ஒரே கருவாடு வாசம்.. ரஜினிக்கு பேர் மாற்றிய செந்தாமரை.. அடடே
சென்னை: பழம்பெரும் நடிகரும், குணச்சித்திர, வில்லன் வேடங்களில் கலக்கியவருமான செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் தன்னுடைய தந்தையின் குணாதிசயங்களை பற்றி சிலாகித்து கூறியிருக்கிறார்.
IndiaGlitz Tamil என்ற யூடியூப் சேனலுக்கு, செந்தாமரை மகள் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் ராஜலட்சுமி சொன்னதாவது, அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் இவர்கள் இருவருமே என் அப்பாவை, "செந்தா" என்றுதான் பாசமாக கூப்பிடுவார்கள்.. கலைஞருக்கு என் அப்பா ரொம்ப குளோஸா இருந்தாரு.. நானும் அப்பாகூட கலைஞர் வீட்டுக்கு போயிருக்கேன்.

அப்போது கலைஞர் வெறும் பனியன் போட்டுட்டு, கைலி கட்டிட்டு, உட்கார்ந்து புக் படிச்சிட்டு இருப்பார்.. அவரை சுற்றிலும் புத்தகங்கள் நிறைய இருக்கும்.. எப்பவுமே படிச்சிட்டே இருப்பாரு, எழுதிட்டே இருப்பார். கேஷூலாக இருப்பார்.. கலைஞருக்கு கருவாடு என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் வீட்டுக்கு போகும்போதெல்லாம் நிறைய முறை கருவாடு வாசனை வந்திருக்கு..
செந்தாமரை பெயர்: அவங்க வீட்டில் 2 நாய்கள் இருக்கும். இதெல்லாம் எனக்கு நிறைய ஞாபகம் இருக்கு. கலைஞரின் பேத்திக்கு, என்னுடைய அப்பா செந்தாமரையின் பெயரைதான் வைத்திருப்பார். எத்தனையோ உதவிகளை கலைஞர் செய்ய முன்வந்தார். ஆனால், என்னுடைய அப்பா அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிட்டார்.
என் அப்பா நேர்மையானவர். முகஸ்துதி யாரையுமே செய்ய மாட்டார்.. கூழைக்கும்பிடு இருக்காது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசிவிடுவார்.
ரஜினிகாந்த்: ரஜினி சாருக்கும், என் அப்பாவுக்கும் நல்ல நட்பு உண்டு.. அப்பா பற்றி என்னை யார் கேட்டாலும், ரஜினிகூட நடிப்பாரே? அவரா? என்றுதான் கேட்பார்கள்.. தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம் படங்களுக்கு முன்பிருந்தே அதாவது ரஜினிகாந்த் வளருவதற்கு முன்பிருந்தே இவர்கள் இருவரும் நட்பாகத்தான் இருந்திருக்காங்க..
கவிக்குயில் என்ற படத்திலும் இவர்கள் நடித்திருப்பார்கள். அந்த படத்தில் ஒரு ஓரமாக நின்றுகொண்டே இருப்பாராம் ரஜினி. அப்போது அப்பாவே அவரிடம் சென்று பேசுவாராம். யாராக இருந்தாலும் அவர்களை ஒதுக்கிவிடாமல், அரவணைத்து பேசுவது என் அப்பாவின் இயல்பு. அனைவரையும் சமமாக நடத்துபவர்..
நியூமராலஜி: நியூமராலஜி நிறைய பார்ப்பார் என் அப்பா.. ரஜினி என்று பெயரைவிட, ரஜினிகாந்த் என்று என் அப்பாதான் மாற்றினார். Rajini என்று முதலில் எழுதி கொண்டிருந்தார். பிறகு அப்பா சொல்லித்தான்,Rajni என்று மாற்றிக் கொண்டார். இதுமாதிரி சினிமாவில் நிறைய பேருக்கு பெயரை மாற்றம் செய்து தந்திருக்கிறார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் செந்தாமரையின் மகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications