vettaiyan ott: ரஜினி ஃபேன்ஸுக்கு குட் நியூஸ்! வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
சென்னை: வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படம் தற்போது வசூலில் வேட்டை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகம் எங்கிலும் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் மனசிலாயோ, அன்டர் சூடுடா பாடல் சூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரோகிணி, ராணா டகுபதி, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவர் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கன்னியாகுமரி எஸ்பியாக உள்ளார்.
வழக்கறிஞர் சத்யதேவாக நடித்த அமிதாப் பச்சன் என்கவுன்ட்டருக்கு எதிரானவர். இந்த படத்தில் தவறு செய்வோரை என்கவுன்ட்டரில் ரஜினி சுட்டு விடுகிறார். அது போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் கணினி ஆசிரியையாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவரை ஏதோ ஒரு காரணத்திற்காக கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.
இந்த வழக்கில் ஒருவரை கைது செய்கிறார்கள். அவரை ரஜினிகாந்த் அறிவுறுத்தலின்படி என்கவுன்ட்டர் செய்துவிடுகிறார்கள். இந்த நிலையில் உண்மையான குற்றவாளியை விட்டுவிட்டு போலியாக என்கவுன்ட்டர் செய்ததை அமிதாப், ரஜினிக்கு சுட்டிக் காட்டுகிறார். அப்போது சில விஷயங்களை விசாரித்த போதுதான் தன்னால் இறந்தவர் ஒரு அப்பாவி என்று!
இதையடுத்து உண்மையான குற்றவாளி யார், எதற்காக துஷாராவை கொலை செய்கிறார்கள். இந்த படத்தின் கருப்பொருள் என்ன என்பதை எல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதில் நடித்தவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக என்கவுன்ட்டரை தாண்டி இந்த படத்தில் கல்வி தொடர்பான ஒரு மெசேஜும் இருக்கிறது. இந்த படம் தற்போது வசூலில் வாரி குவித்து வருகிறது. படம் ரிலீஸாவதற்கு முன்பே வெளியான மனசிலாயோ பாடல்தான் ரீல்ஸ்களில் குவிந்துள்ளன. இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அந்த வகையில் வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆரம்பத்தில் அமிதாப்புக்கு பிரகாஷ் ராஜ் குரல் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கவே நடிகர் மணிகண்டனை வைத்து செயற்கை நுண்ணறிவில் அமிதாப்பின் குரல் உருவாக்கப்பட்டது. இதற்கு நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications