பிக்பாஸ் சீசன் 6 மோசம்! என்னை கூப்பிட்டு ஏமாத்திட்டாங்க! பிக்பாஸ் ரகசியத்தை உடைத்த நடிகை அபிநயா ஸ்ரீ
சென்னை: பிக்பாஸில் நடப்பது குறித்த ரகசியங்களை நடிகை அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ போட்டு உடைத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி முதலில் இந்தியில்தான் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் தமிழில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள். தமிழில் அண்மையில்தான் பிக்பாஸ் சீசன் 5 முடிந்தது. இதைத் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துவிட்டது.

பிக்பாஸ் சீசன் 6
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நடைபெறுவதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஆனால் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. இதில் அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீ கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி இரு வாரங்களை கடந்திருக்கிறது.

அபிநயா ஸ்ரீ
இந்த நிலையில் நடிகை அபிநயா ஸ்ரீ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார். திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து அபிநயா ஸ்ரீ ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், நாம் நினைக்கும் மாதிரி எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பது இல்லை. உண்மையை சொல்ல போனால் என்னை அவர்கள் காட்டவே இல்லை.

டாஸ்க்
நான் டாஸ்க் செய்ததும் போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்தது என எதையும் காட்டவே இல்லை. அவர்களுக்கு தேவையானவர்களை மட்டும் காண்பித்து அவர்களுக்கு தேவையானதை மட்டுமே டெலிகாஸ்ட் செய்கிறார்கள்.அது போல் நாமினேஷனில் இருந்தேன். இருந்தாலும் ஷேஃப் சோனுக்கு வந்தேன்.

எலிமினேட்
ஆயினும் என்னை எலிமினேட் செய்துள்ளார்கள். உங்களுக்கு வேண்டியவர்களை காப்பாற்றுவதற்கு எதற்காக வோட்டிங் பிராசஸ்? நீங்களே வாரத்திற்கு ஒருவரை எலிமினேட் செய்யலாமே, எதற்கு தேவையில்லாமல் ரசிகர்களிடம் ஓட்டு வாங்கி நீங்கள் எலிமினேட் செய்கிறேன் என சொல்கிறீர்கள்.

கமல்ஹாசன்
அது போல் தமிழ் பிக்பாஸில் கமல்ஹாசன் எல்லா போட்டியாளர்களிடமே நன்றாக பேசுகிறார். ஆனால் தெலுங்கு பிக்பாஸ் அப்படியெல்லாம் இல்லை. அவர்களுக்கு தேவையானவர்களிடம் மட்டுமே பேசி முடிக்கிறார்கள். எனது மனம் மிகவும் மனவருத்தமாக இருந்தது. எனது அம்மாவே நிகழ்ச்சி நடக்கும் நிறுவனத்திற்கு கால் செய்து என் மகளை ஏன் காட்டவில்லை என கேட்டுள்ளார்.

சண்டையிட்ட அனுராதா
அப்படியே காட்டினாலும் ஒரு சில நிமிடங்கள மட்டுமே காட்டுகிறீர்களே என சண்டை போட்டுள்ளார். பிக்பாஸில் இருந்து நான் வெளியேறதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அபிநயா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications