விடாமுயற்சி.. ஆமா.. அஜித், காரை விட்டு இறங்கி தள்ளும்போதும் ஏன் சீட் பெல்ட் போட்டிருந்தாரு தெரியுமா?
சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியான 'விடாமுயற்சி' திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய காட்சியே, தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
கதாநாயகன் பழுதான காரை தள்ளும் காட்சியில், அஜித் காரின் சீட் பெல்ட்டை அணிந்தபடியே நடந்துகொண்டே வண்டியை தள்ளுகிறார். இந்த காட்சியைப் பார்த்த பலரும், "இது இயக்குநரின் கவனக்குறைவால் வந்த பிழை" என விமர்சித்தனர். ஆனால், உண்மையில் இது ஒரு நுணுக்கமான டெக்னிக் என கார் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்!

அஜித் அனுபவத்தில் வந்த டிப்ஸ்?
ஒருவர் தன்னந்தனியாக ஒரு காரை தள்ள வேண்டுமென்றால், நியூட்ரல் கியர் போட்டுவிட்டு, ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்துவிட்டு, சீட் பெல்ட்டை அணிந்தபடி தள்ளுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சீட் பெல்ட் அணிவதால், உடலின் நிலை மையம் சரியாக இருக்கும், மேலும் காரை தள்ளும்போது எந்த விதமான தடங்கலும் ஏற்படாமல் உதவுமாம்.
அஜித் ஒரு ரேஸ் டிரைவர் என்பதால், இந்த டெக்னிக்கை அவர் காட்சியில் இணைக்க சொல்லியிருக்கலாம் என அவரது ரசிகர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். காட்சி வெளியான பின்னர், இதைப் பற்றி மேலும் ஆராய்ந்த பலரும், அஜித் தனது அனுபவத்தால் வந்த டிப்ஸ் ஒன்றை இப்படத்தில் காண்பித்திருப்பதாக பாராட்டுகின்றனர்.
சமூக வலைதளங்களில் இது வைரலாக, "அஜித் தான் உண்மையான டெக்னிக்கல் நடிகர்" என ரசிகர்கள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர். சினிமா மட்டும் இல்ல, டிரைவர்களுக்கு கூட பயனுள்ளதாக இருக்கும் தரமான தகவல்களை அஜித் தன் படங்களில் நம்முடன் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது!












Click it and Unblock the Notifications