ரூ.100 கோடி வசூல் விடாமுயற்சி? அஜித்தின் கடும்முயற்சி இனிமேல் 1 வாரம் மகிழ்ச்சி வேட்டைதான்: பிரபலம்
சென்னை: விடாமுயற்சி ரிலீஸாகி உள்ள நிலையில், "இனி லைகாவை காப்பாற்ற போவதே அஜித்தான்.. லைகாவின் சினிமா வாழ்க்கையை தீர்மானிக்க போவதும் அஜித்தான்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் "விடாமுயற்சி".. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.. அனிருத் இசையமைத்திருக்கிறார்.

சிறப்பு காட்சி: இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பிறகு தேதி மாற்றப்பட்டது. தற்போது, தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது... மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படம் முன்னதாகவே ரிலீஸாகிவிட்து.
இந்த விடாமுயற்சி ரிலீஸ் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "விடாமுயற்சி அஜித்தின் கடும்முயற்சி.. எப்போது வரும் விடாமுயற்சி என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.. பொங்கலுக்கு வரும் என்றார்கள்.. ஆனால், வரவில்லை.. கார் ரேஸில் அஜித் மாஸ் காட்டியதுமே, அஜித் ரசிகர்கள் ஓரளவு ஆறுதல் அடைந்தார்கள்..
முரட்டுக்காளை: இப்போது விடாமுயற்சி வந்துள்ளது.. பில்லா அஜித் என்று அழைக்கப்பட்ட நிலையில், "முரட்டுக்காளை" அஜித் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. அந்த அளவுக்கு போராடி படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..
விஜய்யின் லியோ படம் அதிக கலெக்ஷனாக இருந்து வருகிறது.. இந்த கலெக்ஷனை அஜித்தின் விடாமுயற்சி டச் பண்ண வாய்ப்புள்ளது.. ஜனநாயகன் படத்தில் மீண்டும் கிங் மாதிரி விஜய் கலெக்ஷன் எடுப்பார். ஆனால், அதற்கு பிறகு, விஜய்யின் அனைத்து கலெக்ஷனையும் முறியடிப்பது அஜித்தாகவே இருக்கும்.
வேட்டை: இன்னும் ஒரு வாரத்துக்கு விடாமுயற்சி வேட்டைதான் நடக்கும்.. படம் எப்படி இருக்கிறது என்று முதல் நாளும், முதல் நாள் கலெக்ஷன் என்ன? என்று மறுநாளும், 2வது, 3வது நாள் கலெக்ஷன் என்று மிகப்பெரிய டாக் ஓடும். எப்படியும், 3 நாளில் 100 கோடி கலெக்ஷனை விடாமுயற்சி தரும்.. இதை நான் அடித்து சொல்கிறேன்.. ஏனென்றால், வரும் ஞாயிறு வரை எங்குமே டிக்கெட் இல்லை..
அமெரிக்காவில் புல் புக்கிங் முழுமையாக நடந்துள்ளது. அஜித்தின் கார் ரேஸூக்கு பிறகு, துபாயிலும் விடாமுயற்சி படத்துக்கு டிக்கெட் வாங்க கியூ நிற்கிறதாம். தமிழ்நாட்டை தாண்டி அஜித்தை யாருக்குமே தெரியாது என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால், உலக அளவில் அஜித்தை கொண்டாட துவங்கிவிட்டார்கள். அர்ஜுன் இந்த படத்தில் நல்ல ரோல் இருக்கிறது.. வழக்கமான அர்ஜூனாக இல்லாமல், மாறுபட்ட அர்ஜூனாக இனி ரசிகர்களிடம் பாராட்டப்படுவார்.
லைகா எதிர்காலம்: லைகாவுக்கு இது முக்கியமான படம்.. பெரும் போராட்டத்துக்கு பிறகு வெளியிட்டிருக்கிறது. விடாமுயற்சி எப்போதுமே வெளிவராது என்று மைனஸாக சொன்னார்கள்.. எல்லாருடைய கூட்டு முயற்சியிலும் இப்போது வெளிவந்துள்ளது.. இந்தியன் 2, லால் சலாம், வேட்டையன், சந்திரமுகி 2 என எல்லாமே நஷ்டத்தை சந்தித்துவிட்டது. இனி லைகாவை காப்பாற்ற போவதே அஜித்தான்.. லைகாவின் சினிமா வாழ்க்கையை தீர்மானிக்க போவதும் அஜித்தான்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications