Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.700 கோடியா விடாமுயற்சி? அஜித் படத்தில் பட்டாசு தெறிக்குது.. அந்த 20 நிமிஷம்: ஓபனாக சொன்ன பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடாமுயற்சி படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவரும்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோரும், பாசிட்டிவ்வான விமர்சனங்களையே தெரிவித்துள்ளனர்.

Aramnaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் தியேட்டரில் கத்தி கூச்சலிட்டு கொண்டிருக்கிறார்கள்.,. முதல் 20 நிமிஷம் இழுவையாக உள்ளது.. அதை மட்டும் சுருக்கியிருக்கலாம். மற்றபடி விடாமுயற்சி நல்ல படம்தான்..

television vidaamuyarchi ajith kumar

கடத்தப்படும் மனைவியை தேடும் கணவனின் கதை இது.. கணவன் - மனைவிக்குள் இருக்கும் நிஜ பாசம், ஏதோ ஒருசில காரணங்களால் பிரச்சனை வந்துவிடுவதையும், தற்போதைய இளம் கணவன்- மனைவிகள் இதுபோன்ற பிரச்சனைகளால் அதிகம் பிரிவுகளை சந்திப்பதையும், டைரக்டர் மகிழ்திருமேனி சொல்லி உள்ளார்.. இதுதான் இந்த படத்தின் முக்கிய சாராம்சம்..

700 கோடி: ஆரம்பத்தில் பார்க்கும்போது, தல படம் போலவே இல்லை.. அந்த 20 நிமிஷத்தை சரிசெய்திருந்தால் 600, 700 கோடி ரூபாயை எட்டியிருக்கும்.. வழக்கமாக ஹீரோயின்தான் அழகு என்பார்கள்.. அஜித், லுக், ஸ்டைல், மேனரிசம் எல்லாமே சூப்பர்.. மேன்லி லுக், ஹாலிவுட் ஹீரோ போலவே இருக்கிறார்.. காரில் நடக்கும் ஃபைட் அபாரம்.. யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும், ரொம்ப அருமையாகவும் இருக்கிறது..

இந்த படத்தில் அஜித் நல்லா நடிச்சிருக்கார்.. கண்களிலேயே தன்னுடைய சோகம், வருத்தம், இதெல்லாம் பகிர்ந்து கொள்வது அருமையாக இருக்கிறது. போகப்போக திரிஷா அழகாகி கொண்டே இருக்கிறார்.. இந்த படத்தில் மெச்சூரிட்டியாகவும் நடித்துள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

கலர்புல் அஜித்: அதேபோல, King 24x7 சேனலுக்கு பேசிய பயில்வான் ரங்கநாதன் இந்த படத்தை பற்றி சொல்லும்போது,"இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் அஜித், உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறார்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு கருப்பு கலர் முடி, வெள்ளை வெளேர் முகம், ஸ்டைலிஷ் லுக், இதையெல்லாம் பார்க்கும்போது, அழகாக இருக்கிறது

12 வருடங்களை, 3 காலகட்டங்களாக பிரித்து 4 வகைகளாக காட்சிகளை அமைத்திருக்கிறார் மகிழ்திருமேனி.. ஆனால், சில காட்சிகளை பார்க்கும்போது, 96' விஜய்சேதுபதி, திரிஷாவை நினைவுபடுத்துகின்றன. ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பராக சண்டைக்காட்சிகளை எடுத்துள்ளார்.. படம் முழுக்க இங்கிலீஷ் படம் பார்ப்பது போலவே இருக்கு.. அந்த கார் சேஸிங் எல்லாமே டூப் போடாமல் எடுத்திருக்கிறார்கள்.

லொகேஷன் : இந்த படத்தில் காமெடி, குத்தாட்டம் இல்லை.. அஜித்தை வைத்து தரமான படத்தை டைரக்டர் தந்திருக்கிறார்.. ஆனால், தேவையில்லாமல் லொகேஷனுக்கு செலவு செய்திருக்கிறார்கள்.. கதைக்கு தேவையென்று, அந்த லொகேஷனை தேர்வு செய்திருக்கலாம்.. ஆனால், நிறைய காட்சிகளை இங்கேயே எடுத்திருக்கலாம். மொத்தத்தில், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+