"வெறும்" குமார் ஓடிட்டான்... சித்தாள் பார்வதி இப்போ மூணு மாசமாம்...!
சென்னை: சன் டிவி மகாலட்சுமி சீரியலில் மதன் குமார் வெறும் குமார்னு சொல்லி, பார்வதின்ற பெண்ணை கோயிலுக்கு அழைச்சுட்டு போயி, கல்யாணம் பண்ணிக்கறேன்னு குங்குமம் வச்சு மனசை மாத்திடறான்.
அதோட மட்டுமா, அவளையும் அனுபவிச்சுடறான். அடிக்கடி வெளியில சுத்தறாங்க. திடீர்னு சொந்த ஊருக்கு கிளம்பிடறான் கட்டிட இன்ஜியரான மதன்குமார்.
ஆனா, பார்வதிக்கிட்ட தான் வெறும் குமார்னு சொல்லி ஏமாத்தறான். மகாலட்சுமியின் நாத்தனாரை மதன் குமாருக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்கு.

மகாலட்சுமி
மகாலட்சுமி நாத்தனார் கல்யாணத்துக்கு, மாப்பிள்ளை ஜாதகத்துல அதாவது மதன் குமார் ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு கழிக்க பார்வதி இருக்கும் கிராமத்துக்கு வர்றா. அங்கே நகை கொள்ளையனிடம் சிக்கிய மகாலட்சுமியை பார்வதி காப்பாத்தறா. அப்போதான் பார்வதி மகாலட்சுமியிடம் குமார் பத்தி சொல்லி வைக்கலாம்னு சொல்றா.

3 மாசம்
பார்வதி மசக்கையில் தவிக்க, தோழி என்னன்னு கேட்கறா... ஒண்ணுமில்லைன்னு சொல்லிகிட்டே வாந்தி எடுக்கறா. அந்த ஊரிலிருந்த வைத்தியம் பார்க்கற பாட்டி, உன் பேத்தி முழுகாம இருக்கா...சரியா சொல்லனும்னா இப்போ மூணு மாசமா இருக்கணும்னு அதிர்ச்சி நோய் கொடுக்கறாங்க பாட்டி.

கட்டிக்குவார்
பாட்டி பார்வதியை யாரடி அதுன்னுகேட்டு அடிக்கறாங்க..யாரு அதுன்னு சொல்லுன்னு கேட்க, பாட்டி ஊருக்கு கட்டிடம் கட்ட வந்தார் அந்த இன்ஜினியர் குமார் பாட்டி. அவர் என்னை கல்யாணம் செய்துக்கறேன்னு கோயிலில் வச்சு சத்தியம் செஞ்சார் பாட்டின்னு அழறா.

கலைச்சுடலாம்
பார்வதி வாடி ஆஸ்பத்திரிக்கு போலாம்னு கூப்பிடறாங்க பாட்டி. எதுக்கு பாட்டின்னு பார்வதி கேட்க...புள்ளைய கலைச்சுடலாம்டி.. ஊரு பேரு தெரியாத எவனோ ஒருத்தன்கிட்ட ஏமாந்துட்டியேடி... அவன் வருவான்னு வேற சொல்ற.. அதுவரைக்குமா வயித்துல புள்ளையோட காத்திருப்பியான்னு பாட்டி அழறாங்க.

அவர் வருவார்
முடியாது பாட்டி, அவர் என்னை கல்யாணம் கட்டிக்க வருவார்.. கண்டிப்பா வருவார்னு பார்வதி சொல்ல, இங்கு பார்வதி இருக்கும் ஊர் கோயிலில் மதன்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடக்க ஏற்பாடு நடக்குது.
என்னே விதியின் விளையாட்டு...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications