Viduthalai 2 OTT: விடுதலை 2 ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது.. எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே வருகிறது
சென்னை: விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் திரையரங்குகளில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. டிசம்பர் 20, 2024 அன்று வெளியான இப்படம், "புஷ்பா 2: தி ரூல்" மற்றும் "பேபி ஜான்" போன்ற பெரிய படங்களுடன் போட்டியிட்டது. 9 நாட்களில் ரூ. 34.26 கோடி வசூல் செய்துள்ள இப்படம், எதிர்பார்த்ததை விட முன்னதாகவே ஓடிடியில் வெளியாக உள்ளது. எப்போது, எங்கே பார்க்கலாம் என்பது குறித்த தகவல்கள் இதோ
விடுதலை 2 ஓடிடி:
ஒரு சில ஊடக தகவல்களின்படி, "விடுதலை 2" திரைப்படம் ஜனவரி 17, 2025 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. இப்படம் ஓடிடிபிளே பிரீமியத்திலும் கிடைக்கும்.

விடுதலை 2 பற்றி:
விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, சூரி, சூர்யா சேதுபதி, தமிழ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படம் சுமார் ரூ. 65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இது 2021 இல் வெளியான விடுதலை படத்தின் தொடர்ச்சியாகும். "விடுதலை பாகம் 1" ஆறு வாரங்களில் ரூ. 36.98 கோடி வசூல் செய்தது. பாகம் 2 முந்தைய பாகத்தை விட சிறப்பாக அதிக வசூல் பெற்றுள்ளது. அனுராக் காஷ்யப்பும் இப்படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
வெற்றி மாறன் கொண்டாட்டம்: விடுதலை 2 திரைப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜு முருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், படக்குழுவினர் படத்தின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர். தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிரம்மாண்ட மாலை மற்றும் பூங்கொத்து கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications
