Viduthalai part 2 OTT: ZEE 5 ஓடிடியில் விடுதலை பாகம் 2 ரிலீஸ் இல்லை! எதில் வெளியாகிறது தெரியுமா?
சென்னை: விடுதலை பாகம் 2 திரைப்படம் ZEE 5 எனும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த நிலையில் தற்போது வேறொரு தளத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான விடுதலை பாகம் 2 எனும் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் இந்த படம், விடுதலை படத்தை காட்டிலும் திரையரங்குகளில் பெரிய அளவுக்கு ஆடியன்ஸ்களை கவரவில்லை.

இதனால் இதை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி இந்த படத்தை திரையிடும் உரிமையை ஜீ 5 எனும் ஓடிடி தளத்திற்கு வழங்கப்பட்டது. இது ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடும் என தெரியவந்தது. ஆனால் தற்போது வேறொரு ஓடிடி தளத்தில் வெளியிட போகிறதாம்.
அதாவது ஜீ 5-க்கு பதிலாக அமேசான் பிரைம் வீடியோவில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகிறது என சொல்லப்படுகிறது. எனவே அமேசான் பிரைமிலும் அதே ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகிறதா இல்லை வேறு தேதியில் வெளியாகுமா என தெரியவில்லை. இந்த படத்திற்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியில் 1 மணி நேர கூடுதல் காட்சியும் இடம் பெறும் என சொல்லப்படுகிறது.
நடிகர் சூரி நடிப்பில் விடுதலை பாகம் 1 ரிலீஸாகி நல்ல வசூலை வாரி குவித்தது. ஆனால் விடுதலை பாகம் 2 சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமே விஜய் சேதுபதியின் வாத்தியார் கேரக்டர்தான். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த படம் ரிலீஸான போதிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்த படத்தில் பேசப்பட்டிருந்த அரசியல் பலருக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். இந்த படம் முதல் 2 நாட்கள் வசூலை குவித்திருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் சறுக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்த படத்துடன் வெளியான முஃபாசா தி லயன் கிங் படத்தின் வசூல் அதிகரித்தது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications