அடடா.. நேர்கொண்ட பார்வை நாயகி இப்படி அசத்தறாரே!
Recommended Video
சென்னை: எனக்கு நாற்பது வயசாகுது.. கவர்ச்சி குறைந்து போய்விட்டதா என்ன? இளமையாகவும், காதல், ரொமான்ஸ் என்கிற ஆர்வம் குறையாமலும் இருக்கிறேன் என்று கூறுகிறார் நடிகை வித்யா பாலன்.
முதலில் விளம்பரப் படங்களில் நடித்து, அழகாக அடையாளம் காணப்பட்டவர் வித்யா பாலன். ஆரம்பத்தில் நார்மல் உடல்வாகோடு இருந்தவர், இப்போது கொஞ்சம் கூடுதல் வெயிட் போட்டு இருக்கார்.
என்றாலும், அவரது முக அழகும், கவர்ச்சியும் இன்னும் குறையத்தான் இல்லை. முன்பைவிட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறார். உடலில் இளமை ததும்புகிறது.

மூக்குதான் எடுப்பு
நடிக்க வேண்டிய வயதில் நான் நடிக்க வரவில்லை. நடிகைகள் கல்யாணம் செய்து கொள்ளும் வயதில்தான், நான் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்தேன். என் முகத்திற்கு கவர்ச்சி சேர்ப்பது என் மூக்கு என்று எல்லோரும் சொல்ல கேட்டிருக்கிறேன். எனக்கும் அதுதான் தோன்றுகிறது.

நாற்பது வயது
கல்யாணம், குழந்தை என்று அதுவும் என் வாழ்க்கையில் லேட்டாகத்தான் இருந்தது. இப்போது எனக்கு நாற்பது வயது ஆகிறது. இன்னும் இளமை குறையாமல் கவர்ச்சியுடன் இருப்பதாகவே உணர்கிறேன். அதே போல காதல், ரொமான்ஸ் கூட எனக்கு இன்னும் குறையவில்லை. நாற்பது வயது ஆனால் பெண்களுக்கு எல்லாமே குறைந்து போகும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

சகுந்தலா தேவி
பெங்களூரூவை சேர்ந்த கணக்குப் புலி சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன். படத்துக்கு சகுந்தலா தேவி- மனித கணினி என்று பெயர் வைத்துள்ளார்களாம். படப்பிடிப்பு நடந்து வருகிறது. கணித மேதை சகுந்தலா தேவியாக நடிப்பதில் மிகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கார்.

வெப்சீரிஸ் வாய்ப்பு
வெப்சீரிஸ் மோகம் இவரையும் விட்டு வைக்கவில்லை. வெப்சீரிஸ் வாய்ப்பும் இவருக்கு வந்துள்ளது. அதுவும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில். ஒப்புக்கொள்ள கசக்குமா வித்யா பாலனுக்கு? இரும்பு மனுஷி இந்திரா காந்தியாக நடித்து வருகிறார் வெப் சீரிஸில்.

எப்படி இருந்தது
நடிகை ஸ்ரீதேவியே தல அஜித்தை மிகவும் புகழ்ந்து இருந்தார். நான் எம்மாத்திரம்...அவருடன் நடித்தது வெகு சிலிர்ப்பான அனுபவம். அந்த படத்தில் நான் கூடுதல் அழகுடன் மிளிர்ந்ததாக நினைக்கிறேன் என்றும் கூறுகிறார் இந்த தன்னம்பிக்கை நாயகி. தல கூட நடிச்சுட்டு தன்னம்பிக்கை இல்லாமல் போனால் எப்படி?
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications