வித்யாவோட முழுக் கவனமும் இப்ப "அது"லதான் இருக்காம்.. நல்லா பாருங்க!
சென்னை: நாயகி சீரியலில் இருந்து வெளி வந்த பிறகு வித்யா பிரதீப் இணையதளங்களில் தனது கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார். தினமும் ஒரு போஸ்ட் போடும் இவர் ரசிகர்களுக்கு விதவிதமான அனுபவங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சில கதாநாயகிகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து இருக்கிறார்கள் ஆனால் சில கதாநாயகிகள் வெள்ளித்திரையில் நன்றாக கலக்கிவிட்டு வயதான பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்கள்.
வித்யா பிரதீப் அப்படி இல்லை, வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல அவருடைய படிப்பு தொழிலான டாக்டர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

ரொம்ப கண்டிப்பான வீடு
வீட்டில் கல்லூரி முடிக்கும்வரை நடிக்கப் போகக் கூடாதுன்னு இவரது வீட்டில் கண்டிப்பாக சொல்லி விட்டார்களாம். இதனால் இவர் காலேஜ் படித்து முடித்ததும் தான் தனது ஆசையான மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். டாக்டராகவும் ஆராய்ச்சியாளராகவும் பிசியாக இருக்கும் நேரத்திலும் மாடலிங்கில் இவர் விதவிதமாக போட்டோஸ் எடுத்து குவித்து வருகிறார்.

200க்கும் மேற்பட்ட விளம்பரங்கள்
சினிமாக்களில் நடிப்பதற்கு முன்பே இவர் 200 க்கும் மேற்பட்ட நகை விளம்பரங்களிலும் புடவை விளம்பரங்களிலும் விதவிதமாக ஜொலித்து நடித்திருக்கிறார். அதிலிருந்துதான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தது. முதல் முதலில் ஜெய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம். ஆனால் அந்த படத்தில் அவரது நடிப்பு அவ்வளவாக வெளியே தெரியவில்லை.

சினிமா வாய்ப்பு
அதன் பிறகு வந்த சைவம் படத்தில் இவர் குட்டி பாப்பாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இதிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .அதன் பிறகு தான் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அருண்விஜய் ,கிருஷ்ணா, ஜெய் ,சமுத்திரக்கனி இப்படி பல ஹீரோக்களுடன் நடித்து கொண்டிருக்கும் போதுதான் நாயகி சீரியல் க்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நாயகியில் ஆனந்தி
இந்த சீரியலிலும் இவர் அந்த கேரக்டரை முழுமையாக நடித்திருந்தார். நாயகி சீரியலில் இவர் ஆனந்தியாக நடித்திருந்தது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. அதிலிருந்து இவர் நீங்கியதும் பல ரசிகர்கள் இவரை மிஸ் பண்ணி இருக்கிறார்கள் அந்தக் கவலையைப் போக்குவதற்காக தான் இணையதளத்தில் இப்போ விதவிதமாக போட்டோஸ் களாக குவித்து வருகிறார்.

குவியும் ரசிகர்கள்
இவருக்கு ரசிகர்கள் இப்போ இணையதளத்தில் இவருக்கு அதிகமாக இருக்கிறார்கள். இணைய தளங்களில் பல ரசிகர்கள் இவரை பார்த்து கிறங்கிப் போய் இருக்கிறார்கள். இணையதளங்கள் மூலமாக இவருக்கு பல லவ் ப்ரொபோஸ் வருகிறதாம். அதையும் ஃப்ரீ டைம்ல படித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications