இந்த "குட்டிக்கு" இத்தனை லட்சம் செலவு செய்தாரா நடிகை வித்யூலேகா ராமன்? இன்ஸ்டாவில் குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சக்கணக்கில் ரூபாய் கொடுத்து நடிகை வித்யூலேகா ராமன் ஒரு பொருளை வாங்கியதுடன் அதற்கு குட்டி என்றும் பெயர் வைத்துள்ளார். இவருடைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு வாழ்த்துகளும் குவிகிறது.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகையாக வலம் வந்தவர் வித்யூலேகா ராமன். இவர் நடிகர் மோகன்ராமின் மகளாவார். வித்யூலேகா, நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

television vidyulekha raman entertainment

அது போல் அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவர் மூன்றாவது ரன்னர் அப்பாக வந்தார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவருக்கு ஆயிரக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் தனது கணவருடன் சென்று எம்ஜி நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை வாங்கி வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பதவில் கூறியிருப்பதாவது: எனது முதல் எலக்ட்ரானிக் வாகனத்தை வாங்கியுள்ளேன். சென்னை டிராபிக்கில் ஓட்டுவதற்கு இந்த கார் எனக்கு உதவியாக இருக்கும். பார்க்கிங் பிரச்சினையும் ஏற்படாது. இந்த சிறிய கார்தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதன் பெயர் குட்டி என வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் நன்றி என இன்ஸ்டாவில் வித்யூ ரிப்ளை அனுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்ற கார் என்றும், வாரத்திற்கு ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது ப்ரமோஷன் வீடியோவா என நெட்டிசன் கேட்ட கேள்விக்கு அப்படியில்லை, முழு பணத்தையும் கொடுத்து வாங்கியுள்ளேன் என பதில் அளித்துள்ளார். இந்த காரின் விலை 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்பனையாகிறது. இது முழுக்க முழுக்க மின்சார சார்ஜிங்கில் இயங்கும். 4 பேர் வரை செல்லலாம்.

பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,20,000 கி.மீ. வரை வாரண்டி உள்ளது. இந்த காரை புக் செய்த ஒன்று முதல் 5 வாரங்களில் கிடைத்துவிடுகிறது. போக்குவரத்து நெருக்கடியான இடங்களில் பெரிய காரை எடுத்துச் செல்வதை விட இந்த சிறிய கார் நல்லது. மேலும் பார்க்கிங்கிற்கும் அதிக இடம் தேவைப்படாது. காம்பேக்ட்டாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட இந்த மின்சார சார்ஜர் வாகனங்களை பலர் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இரு சக்கர வாகனங்களிலும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வந்துவிட்டன. இந்த எம்ஜி காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் போட்டால் 461 கி.மீ. வரை இயக்கலாம் என்கிறார்கள். இது 5 நிறங்களில் உள்ளன.

பின் சீட் குறுகியதாக இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இதில் பின் சீட் நன்றாக ஸ்பேஷியஸாகவே இருக்கிறது. குழந்தைகள் உட்கார வசதியாக இருக்கும். ஏசி இயந்திரங்களும் நன்றாக வேலை செய்கிறது. பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+