நீ வருவாய் என படத்தில் விஜய் நடிக்க இருந்த கேரக்டர் தெரியுமா? கடைசி நேரத்தில் முடிவு மாறிய காரணம்!
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அஜித் இணைந்து ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு நீ வருவாய் என திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இருந்தார்கள், ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது என்று அந்த காரணத்தை பற்றி பாவா லட்சுமணன் பேசி இருக்கிறார்.
புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் அதிகமாக சேர்ந்து நடிப்பது கிடையாது. எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்குப் பிறகு நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் இருவருடைய ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர். அவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை பார்க்க முடிகிறது.

ஆனால் இந்த நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். ரஜினி, கமல் இருவரும் இணைந்து பதினாறு வயதினிலே திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அதுபோல இன்னும் ஒரு சில திரைப்படங்களிலும் இவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த வரிசையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நீ வருவாய் என திரைப்படத்தில் நடிக்க இருந்தது என்று அந்த கதையை நடிகர் பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நீ வருவாய் என திரைப்பட கதையை இயக்குனர் ராஜகுமாரன் விக்ரமனிடம் வந்து சொன்னார். கதையை கேட்டதுமே விக்ரமனுக்கு பிடித்து விட்டது.
அதற்குப் பிறகு ராஜகுமாரனிடம் விக்ரமன் நீங்க ஸ்டராங்கா இந்த படத்தை பண்ணிருவீங்களா? என்று கேட்க, அதற்கு ராஜகுமாரன் சிரித்துக்கொண்டே சார் உங்க கூட நான் இத்தனை படங்கள் பண்ணியிருக்கிறேன் என்னால பண்ண முடியாதுன்னு நீங்க நினைக்கிறீங்களா? கண்டிப்பா பண்ணிடவேன் சார் என்று சொல்லியிருந்தார்.
அதற்குப் பிறகு நடிகர்கள் பிக்ஸ் பண்ணி இருந்தார்கள். முதலில் அந்த படத்தில் அஜித் மற்றும் விஜய் தான் நடிப்பதாக இருந்தது. அதில் அஜித் நடித்த அதே கேரக்டரை அவர் நடிப்பதாகவும் பார்த்திபன் கேரக்டரை விஜய் நடிப்பதாகவும் இருந்தது. அப்போது அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்கும் விஷயம் தெரிந்ததும் விஜய் அஜித் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்று கதையை கேட்டார். அந்த கேரக்டர் விஜய்க்கு பிடித்து விட நான் அஜித் நடித்த கேரக்டரை பண்ணுகிறேன்.
ஹீரோவாக அஜித்தை பண்ண சொல்லுங்க என்று விஜய் சொன்னார். ஆனால் அஜித்துக்கு அந்த கேரக்டர் தான் ரொம்ப பிடித்து இருக்கிறது என்று சொல்லிவிட்டார் என இயக்குனர் சொன்ன பிறகு சரி என்று விஜய் படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்கு பிறகு தான் பார்த்திபன் அந்த கேரக்டரில் நடித்திருந்தார் என்று பாவா லட்சுமணன் கூறியிருக்கிறார். அதோடு இந்த படத்திற்காக அஜித்குமார் 10 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார்.
அவருடைய காட்சிகள் நடித்து முடித்த பிறகும் இரண்டு நாட்கள் சூட்டிங் ஸ்பாட்டில் வந்திருந்தார். அதற்கு காரணம் ராஜகுமாரனை ரொம்ப பிடித்திருக்கிறது, அவரோடு இருக்கும்போது ஜாலியா இருக்கிறது அவர் கலகலப்பா பேசிகிட்டே இருக்காரு என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து உட்கார்ந்து சூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதுபோல அஜித்குமாருக்கு நாகர்கோவிலில் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்து இருந்தோம். நாங்க எல்லாம் வேறொரு இடத்தில் இருந்தோ அப்போது நான் மட்டும் இங்கே இருக்கிறேன் நீங்க எல்லாரும் எங்க இருக்கீங்க என்று அஜித் எங்களிடம் கேட்டார். நாங்கள் இடத்தை சொன்னோம் உடனே அவர் அங்கிருந்து கிளம்பி எங்களோடு சாதாரணமாக நாங்கள் இருந்த இடத்திற்கு வந்துவிட்டார். அஜித் ரொம்பவும் எளிமையானவர் அதனால் தான் அவரால் அப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்தது என்றும் பாபா லட்சுமணன் அஜித்தை பாராட்டி இருக்கிறார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!











Click it and Unblock the Notifications