Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோமாவில் இருந்த நடிகர் நாசரின் மகனுக்காக விஜய் செய்த செயல்..! ஒவ்வொரு பிறந்த நாளிலும் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பன்முக திறமையோடு இருக்கும் நடிகர் நாசர் வாழ்வில் ஏற்பட்ட திடீர் கஷ்டங்கள் குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

நடிகர் நாசரின் மூன்று மகன்களில் ஒருவருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு கோமா நிலையில் இருந்த நிலையில் விஜய் பெயரை தான் முணுமுணுத்து கொண்டிருந்தாராம்.

இதைக் கேள்விப்பட்டதும் நடிகர் விஜய் நாசர் வீட்டிற்கு சென்று அவருடைய மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Vijay helped actor Nassers son who was in a coma

நடிகர் நாசர் திரைப்பட நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை இயக்கியும், திரைக்கதை, வசனம் பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளில் இப்போதும் இளம் கதாநாயகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தன்னுடைய உழைப்பால் பல அங்கீகாரங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

சென்னை அருகில் இருக்கும் செங்கல்பட்டு சார்ந்த நாசர் தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக மகேந்திரனின் காட்டுப் பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய பணக்காடு போன்ற நிகழ்ச்சிகளிலும் சளைக்காமல் நடித்திருக்கிறார்.

ஜனனம் என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை தொடங்கிய நாசர் இப்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு பல விருதுகளும் வாங்கி இருந்தாலும் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீதும் அதிகமான பாசம் வைத்திருக்கிறார். நாசரின் மனைவி பெயர் கமீலா நாசர் அவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். அப்துல் ஆசான் பைசால், லுத்புதீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் தான்.

Vijay helped actor Nassers son who was in a coma

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாசர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அவருக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. அப்போது உங்களுடைய மகனுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது உடனே வாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். மேக்கப்பில் இருந்த நாசர் உடனடியாக அந்த இடத்திற்கு ஓடி சென்று இருக்கிறார். அதற்குள் பல நடிகர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் போங்கள் என்று கூறினார்கள் ஆனாலும் நாசர் அந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்.

பிறகு சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையிலும் நாசருடைய மகன் கோமாவில் தான் இருந்திருக்கிறார். ஆனால் அப்போது விஜய் என்று முணுமுணுத்தாராம். அருகில் இருந்த அனைவரும் என்ன சொல்கிறார் என்று புரியாமல் இருந்திருக்கின்றனர். அவர்களின் நண்பரில் ஒருவர் பெயர் விஜய் தானாம். அப்போ அவரை தான் அழைக்கிறார் என்று எல்லோரும் அவரை கூப்பிட்டு இருக்கின்றனர். ஆனால் அதற்கு பிறகு தான் தெரிந்திருக்கிறது அவர் சொன்னது நடிகர் விஜய்யாம்.

நாசர் மகனுக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். அவருடைய டான்ஸ், நடிப்பு என பலவற்றைப் பற்றியும் புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பாராம். அதனால் அவரைப் பற்றிதான் சொல்கிறார் என்று நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். உடனே நாசர் விஜய்க்கு ஃபோன் பண்ணி இருக்கிறார். விஜய் அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார். அதுவும் அவுட்டிங் இடத்திலிருந்து இருக்கிறார். தகவல் சொன்னதும் விஜயால் நம்பவே முடியவில்லையாம்.

நான் இப்படி வெளியே இருக்கிறேன் ஆனால் விரைவில் வந்து விடுவேன் என்று மட்டும் நாசரிடம் கூறிவிட்டு ஊருக்கு வந்ததும் உடனடியாக நாசர் வீட்டிற்கு விஜய் சென்றிருக்கிறார். விஜயை பார்த்ததும் நாசரின் மகன் சந்தோஷம் அடைந்தாராம். பிறகு ஒரு வழியாக கோமாவில் இருந்து திரும்பிய நாசரின் மகனை பார்ப்பதற்காக அடிக்கடி விஜய் அங்கே சென்று கொண்டே இருப்பாராம். விஜயுடன் நாசர் போக்கிரி படத்தில் நடித்திருக்கிறார். அப்போது கூட தன்னுடைய மகனுக்கு இவ்வளவு பிடிக்கும் என்று எனக்கு தெரியாதே என்று அவர் ஃபீல் பண்ணி கூறி இருந்தாராம்.

இதுபோல நடிகர் நாசரின் மகனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் விஜய் ஊரில் இருந்தால் நேரடியாக சென்று அவருக்கு கேக் வாங்கிக் கொண்டு போய் வாழ்த்து கூறி வருவாராம். அதே நேரத்தில் ஊரில் இல்லாத நிலையில் வீடியோ காலில் பேசி விட்டு ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக அவரை போய் பார்த்துவிட்டு வருவாராம். அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறாராம். இந்த தகவல்கள் தற்போது செய்யாறு பாலு கூறியிருக்கும் நிலையில் இது பலருக்கும் தெரியாத கதை தான் என்று கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+