அரசியலால் விஜயகாந்துக்கு நடந்தது, விஜய்க்கு நடக்கக்கூடாது! சிம்புவால் மாறிய மனம்! டி ராஜேந்தர் ஓபன்
சென்னை: நேற்று மதுரை மாநாடு நடந்த நிலையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு வந்து மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடான இதில் விஜய் பேசிய அடுக்குமொழி பேச்சும் அரசியல் பிரபலங்களின் விமர்சனங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜயின் மாஸ் என்ட்ரி
மாநாடு தொடங்குவதற்கு முன் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு விஜய் மேடைக்கு வந்து ரேம்ப் வாக் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். விஜய் தனது 35 நிமிடப் பேச்சில், "சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும், வேடிக்கை பார்க்க வெளிய வராது. வேட்டையில கூட தன்னைவிட பெரிய மிருகங்களைத்தான் குறிவைத்துத்தாக்கும், ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும் உயிரில்லாததை தொட்டுக்கூடப் பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு எளிதாக எதையும் தொடாது, தொட்டால் விடாது" என்று பஞ்ச் வசனம் பேசினார்.
விஜயகாந்திற்கு மரியாதை
அதுபோல, விஜய் தனது பேச்சின் இறுதியில் விஜயகாந்தை நினைவு கூர்ந்து அவரை "அண்ணன்" என்று அழைத்தார். "அவரை எம்.ஜி.ஆர். குணம் கொண்டவர்" என்றும் புகழ்ந்து பேசினார். விஜய்யின் பேச்சு குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். "விஜய்க்குப் பின்னால் நண்பா, நண்பிகளாக இருக்கலாம், ஆனால் எனக்கு..." என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். அதுபோல கமல்ஹாசன் விஜய்யின் பேச்சு குறித்து எந்தவிதமான எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.
டி. ராஜேந்திரன் ரகசியம்
மாநாடு குறித்து அதிகமானோர் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் டி. ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் எல்லா விஷயத்தையும் சொல்லிடறேன். இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியலுக்காக திரையுலக நண்பர்களை இழக்கத் தயாராக இல்லை" என்று கூறியுள்ளார். "கேப்டன் என்னுடைய நண்பர். அவருக்கு 'சட்டம் சிரிக்கிறது', 'கூலிக்காரன்' போன்ற படங்களுக்கு நான் தான் இசை அமைத்தேன். இந்த அரசியலால் என்னுடைய நட்பும் அவருடைய நட்பும் பிரிந்தது. ஆனால் எங்களுடைய நட்பை ஒட்டி வைத்தது என் மகன் சிலம்பரசன் தான்" என்று டி.ஆர். நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சிம்புவின் முயற்சி:
"கேப்டனும் என் அப்பாவும் இப்படி இருக்கக் கூடாது என எங்களை இணைக்கும் பாலமாக இருந்தது என்னுடைய பையன் சிலம்பரசன் தான். அன்று என் பையன் சொன்ன காரணத்துக்காக நான் அப்போது ஒரு முடிவு பண்ணேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த அரசியல் காரணத்துக்காக என்னுடைய திரையுலகத்தில் இருக்கும் யாரையும் நான் இழக்க விரும்பவில்லை" என்று டி.ஆர். பேசியுள்ளார்.
டி.ஆர். இந்த பேட்டியில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட போதிலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications