விஜய் சேதுபதியின் மகாராஜா! என்னா மேக்கிங்! ஆனாலும் இத்தனை ஓட்டை!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் மேக்கிங் விஷயத்தில் அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அதிலும் சில லாஜிக் ஓட்டைகள் இருப்பதாகவே விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "மகாராஜா"...
என்ன மேக்கிங்!.. திரைக்கதை தான் நம்மை அற்புதப்படுத்துகிறது. சினிமா என்பது Frame by Frame அற்புதம் தான். போட்டோக்களை வரிசையாக ஃபிலிமில் பதிய வைத்து ரீலை வேகமாக ஓட்டும் போது திரையில் நாம் ஒரு போட்டோவை பார்த்து விழித்திரையில் பதியும் முன்னே அடுத்த போட்டோ வந்து விடுவதால் நமக்கு அது திரையில் நகர்வது போல் தெரியும்.

இது தான் சினிமாவின் டெக்னிக். அதைப்போல் இந்தத்திரைக்கதையில் நாம் ஒரு காட்சியில் நிலைத்திருக்கும் போது அடுத்தக்காட்சியை அது Flashback என தெரியாமல் வைக்கிறார்கள். இரண்டுக்குமான ஒரு கனெக்ட்டிவிட்டியை கொடுத்து விடுவதால் நாம் நம்பி ஒரே காலகட்ட படமாக பார்க்கிறோம். உதாரணத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் விஜய் சேதுபதி தன் மகள் கேம்ப்புக்கு போயிருப்பதாக சொல்வதால் அதற்கடுத்த கேம்ப் காட்சி வரும்போது நாம் தொடர் காட்சி என்றே நினைத்துவிடுகிறோம்.
மகள் போனில் வாட்சப்பில் பேசுவதை இவர் வாட்சப்பில் கேட்பதையும் சரியாக இணைப்பு காட்சியாக பயன்படுத்தியிருப்பதால் நாமும் லீனியராக படம் ஓடுவதாக நினைக்கிறோம். Flashback காட்சிகளை கிறிஸ்டோபர் நோலன் தன் Momento படத்தில் இதே யுத்தியை பயன்படுத்தி எடிட் செய்திருப்பார். ஆனால் Flashback கருப்பு வெள்ளையிலும், நடக்கும் காலம் கலரிலும் வரும். ஆனால் இரண்டுமே அதில் கனெக்ட் ஆகும். அது வேறு ஒரு திரைக்கதை உத்தி. இதில் எல்லாமே லீனியராக போவது போல் எடுத்தாலும் ஃப்ரேமில் காலகட்டத்தை உணர்த்தும் பொருட்களை பயன்படுத்தி இருப்பது நம் கவனத்துக்கு அப்போது வராது.
அதோடு ஒரு காட்சியையே சின்ன திரைக்கதை போலவே எடுத்திருக்கிறார் இயக்குனர். அந்த நட்டி இன்ஸ்பெக்டர் அறிமுகக்காட்சி. காட்சிப்படி ஒரு திருடன் சுவர் ஏறிக்குதிக்கிறார். படியேறி ரூமுக்குப்போய் பீரோவுக்கு மேலிருக்கும் சாவியை எடுத்து திறக்கும் போது பின்னால் போலீஸ், வீட்டு ஓனர், மனைவி நிற்பதாகக்காட்டுவது நல்ல சஸ்பென்ஸ். அதோடு நட்டி ஒரு பேராசைக்கார திருட்டு போலீஸ் தான் என்பதை அந்த அறிமுகக்காட்சி காட்டுகிறது. அதோடு அந்த திருடனின் மனைவியிடம் "ஏதாவது வேணும்னா வீட்டுல அம்மாக்கிட்ட கேளு..." என்பதிலிருந்து மனிதாபிமானம் உள்ள ஒரு போலீஸ் என்பது நமக்கு காட்சியாகக்காட்டப்படுகிறது.
விஜய்சேதுபதிக்கு வில்லனைப் பற்றிய ஒரே க்ளு...முதுகில் கட்டியுள்ள போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஆள்.. அதற்காக அவர் ஸ்டேஷனின் முதல் காட்சியில் நட்டி 'போலீசு' என்ற திருடனை அடிக்கும் போதே முதுகை தடவித்தான் "சார்" எனக் கூப்பிடுவார். நட்டிக்கு கட்டி இல்லை என்பது உறுதி ஆகும். எஸ்.ஐ அருள்தாஸை தள்ளி விடுவது போல் சட்டையை கிழித்து முதுகைப்பார்த்து விடுவார். இன்னொரு கான்ஸ்டபிள் சட்டை மாற்றும் போது பின்னே நின்று பார்ப்பார். பாய்ஸ் மணிகண்டனின் போட்டோவோடு வரும் கேரேஜ் ஆளின் முதுகை தடவிப்பார்த்து சமாதானம் சொல்வார்.
இந்தக்காட்சிகள் நமக்கு படம் பார்க்கும் போது தெரியாது. கடைசியில் க்ளைமேக்ஸ் போது தெரியும். அல்லது கதை தெரிந்து இரண்டாவது முறை பார்க்கும் போது புரியலாம். திரைக்கதையின் சூட்சுமம் Non-linear படத்தை Linear போல் இணைத்து நம்மை நம்ப வைப்பது தான். இதில் குப்பைத் தொட்டி போல் 'த்ரிஷ்யம்' மலையாளப்படத்தில் படம் முழுக்க டெட்பாடியை தேடுவார்கள். க்ளைமேக்ஸில் அந்த டெட்பாடி எங்கே என்பதை மோகன்லால் அந்த போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும் போது ஸீன் பை ஸீனாக ஒரே மாதிரி காட்டுவார்கள்.
அங்கே தான் சஸ்பென்ஸ் உடையும். இதில் நல்ல சிவம் என்கிற சிங்கம்புலி விஜய்சேதுபதியிடம் நடித்துக் காட்டும் போது உண்மையான சம்பவங்களை இணைத்துக்காட்டி இருக்கமுடியும். ஆனால் சிங்கம்புலியின் அந்த க்ளைமேக்ஸ் நடிப்புக்காகவும், அனுராக் 2024 என்ட்ரி காட்சிக்காவும் அப்படி முன்பே சஸ்பென்ஸை உடைத்து விடுகிறார்கள். கதையை போனில் சொல்லச் சொல்லி கேட்ட போலீசும் "மகாராஜா நீ வந்தது குப்பைத் தொட்டிக்காக இல்லை" என்று சொல்லும் போது விஜய் சேதுபதி உண்மையை சொல்லி விட்டாரோ என நம்மை நம்ப வைக்கிறார்கள்.
இப்போது சிங்கம்புலியின் வஞ்சக நடிப்பு நமக்கு புரிந்து நாம் அடுத்த காட்சிகளை பார்க்கிறோம். இந்த க்ரியேட்டிவிட்டி அட்டகாசம். கடைசியில் குப்பைத்தொட்டி தன் மகளை காப்பாற்றும் என மகளின் படுக்கையின் கீழ் வைத்திருக்கிறார்.
கதைப்படி கவுன்சிலருக்கு நடிகர் குணால் கண்ணாடி பரிசளித்ததாகவும் அதை தேடுவதாகவும் நடக்கும் காலகட்டம் 2024. Flashback காட்சிகளாக அனுராக் காஷ்யப் திருடும் காட்சிகள் 2009. ஆனால் நடிகர் குணால் 2008லேயே மறைந்து விட்டார். அவர் எப்படி 2024ல் கண்ணாடி தர முடியும்?.நடிகர் குணாலை இந்தக் காட்சிகளில் பயன்படுத்தியதன் நோக்கம் புரியவில்லை.
மூன்று வில்லன்கள். மணிகண்டனை கவுன்சிலரின் கார் வந்த டோல்கேட் பில் மூலம் தேடி வந்து கொல்கிறார். அப்போது தவற விட்ட செல்போன் மூலம் போலீஸ் சிங்கம் புலியை பிடிக்கிறது. விஜய் சேதுபதியிடம் கொல்லக் கொடுக்கிறது. அனுராக்கின் இடம் தெரிந்து போன விஜய்சேதுபதி அவரை தன் மகளின் தந்தை என்பதால் கொல்லாமல் விடுகிறாரா?.. உடும்புப்பிடிக்காரர் என விஜய்சேதுபதிக்கு கொடுத்த அறிமுகம் இங்கே தடுமாறுகிறது. அனுராக் தன் மகளுக்கு செய்த கொடுமைக்கு தானே தண்டித்துக் கொள்கிறார். ஒரு சென்டிமெண்ட் கொடுத்து அனுராக்கை புனிதப்படுத்துகிறார் இயக்குனர்.
மகாராஜா.... இரு கோடுகளாக இரண்டு பெண் குழந்தைகளின் தந்தைகளின் குணங்களை வைத்து அட்டகாசமாக செய்யப்பட்ட தண்டவாளம்... ஒரு நல்ல ரயில் பயணம் செய்த திருப்தி... Hatsoff நித்திலன்..💗 இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications