Vijay SK: ரஜினி, அஜித் உதவல.. கை கொடுத்த விஜய்! சிவகார்த்திகேயன் மறந்துட்டாரே! பிரபலம் ஓபன்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் நடிகர் விஜய் படத்துடன் மோத இருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி வலைப்பேச்சு அந்தணன், பேசும்போது சிவகார்த்திகேயன் நன்றியை மறந்து விட்டார் என்று பேசி இருக்கிறார். இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியன் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் சில நாட்களாகவே பராசக்தி மற்றும் ஜனநாயகன் இரண்டு படத்தைப் பற்றிய பேச்சு தான் இருக்கிறது. இந்த நிலையில் அந்தணன் இது பற்றி பேசும்போது இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது எந்த தவறும் இல்லை. வரக்கூடாது என்று நானும் சொல்லவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு உதவி செய்தவர்களுக்கு எல்லாம் மறந்து விட்டார்.

தனக்கு உதவி செய்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் துரோகம் தான் செய்து கொண்டிருக்கிறார். அதேபோலத்தான் இப்போது விஜய்க்கு கூட செய்து இருக்கிறார். காரணம் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரஜினியுடன் நடிக்க ரொம்ப ஆசை. ஆனால் அதற்கு ரஜினி மறுத்துவிட்டார். அதற்கு பிறகு குட் பேட் அக்லி அல்லது விடா முயற்சி படத்தில் எப்படியாவது ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைத்திருந்தார்.
ஆனால் அதற்கு அஜித் தரப்பில் இருந்து ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் தான் இவருக்கு கோட் படத்தில் துப்பாக்கி சீனில் நடிக்க வைத்து, விஜய் ஒரு பிரபலத்தை கொடுத்து இருந்தார். இனி விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன் தான் என்ற ஒரு இமேஜ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கிடைத்தது. ஆனால் அந்த நன்றியை எல்லாம் சிவகார்த்திகேயன் மறந்துவிட்டார்.
விஜய் செய்த நன்றி கடன் கொஞ்சமாவது அவருக்கு இருந்திருந்தால் ஜனநாயகம் படத்தோடு மோத வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் சிவகார்த்திகேயன் இதைத்தானே விரும்புகிறார். ஒரு கட்டத்தில் விஜய்க்கு அவருடைய விருப்பம் தெரிய வந்ததும் என்ன சொல்லுறீங்க என்பது போல தான் ஷாக் ஆகியிருக்கிறார் என்று தகவல் கிடைத்தது என்று அந்தணன் கூறி இருக்கிறார்.
ஜனநாயகன் படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியவர்களுக்கு கலெக்ஷன் என்பது நினைத்த மாதிரி அமையாது. அதனால் முதலில் பேசப்பட்ட தொகையை அவர்கள் கொடுக்க முடியாது என்று கூட சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இதைத்தான் இங்கு உள்ளவர்கள் விரும்புகிறார்கள். விஜய்க்கு எதிராக வினியோகஸ்தர்கள் பிரச்சனை பண்ண வேண்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் நடக்கும் என்று விஜய்க்கு முன்பே தெரிந்திருக்கும். அதனால் தான் அவர் அரசியலுக்கே வந்து இருக்கிறார். விஜய்க்கு எதிராகவே திரை உலகத்தை திருப்பவும் சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, அதுவும் விஜய்க்கு தெரியும். இருந்தாலும் ரசிகர்களின் மனதில் அவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் என்று வலைப்பேச்சு பேசி இருக்கிறார்.
இதற்கு திருப்பூர் சுப்பிரமணியன் பேசும் போது சிவகார்த்திகேயன் நன்றி மறந்தார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவர் இதில் எந்த இடத்தில் நன்றியை மறந்தார். ஒரே நாளில் இரண்டு நடிகர்களின் படம் முதல் வரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் திருப்பூர் சுப்ரமணியன் பேசியதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அதேபோல அந்த பேசிய விஷயங்களை வைத்து விஜய்யின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வருகின்றனர்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!











Click it and Unblock the Notifications