தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்!
சென்னை: விஜய் டிவியின் மிக பெரிய ஷோ சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. நடக்க உள்ளது.
வெற்றியாளர்களுக்கு பல லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பும் இம்முறை உண்டு.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பல ஹிட்களை கொடுத்து வரும் இளம் இசை
அமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் அவர்களும் இணைகிறார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு திறமையை காட்டும் ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும். சமீபத்தில் வெளியான ப்ரோமோ பலராலும் பேசப்படுகிறது இதில் அனிருத் அவர்கள் தனது இசை பயணம் எப்படி இருந்தது என்பது பற்றியும் கஷ்டங்களை பற்றியும் பேசி உள்ளார்
மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு பெரிய மேடை என்பதையும் கூறியுள்ளார். ஆயிரம் கனவுகளை நிஜமாக்கிய ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் என்றால் எல்லா வயதினறும் அடங்குவர்.

இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் கூடிய விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது வரும் ஏப்ரல் 27 முதல், சனி மற்றும் ஞாயிறு, இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பாட்டு, ஸ்வரம், ஸ்ருதி என பாமர மக்களும் இசை மொழி பேசத் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியை பார்த்து தான். 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்பொழுது உலக அளவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது.
நிகில் மேத்யூ, அஜீஸ், சாய் சரண், திவாகர் மற்றும் ஆனந்த ரவிந்தாக்ஷன், செந்தில் கணேஷ் என டைட்டிலை தட்டி சென்றவர்கள் பலர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பொருத்த வரையில், வெற்றியளர்கள் மட்டுமின்றி, திறமைசாலிகள் அனைவருக்குமே நல்ல வாய்ப்புகள் கிட்டி வருகின்றது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பென்னி தயால், பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், மெலடி குயின் அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி சுவேதா மோகன் பங்கேற்கின்றனர்.
முற்றிலும் புதுமையான இசை தேடலாக இருக்கப்போகிறது. மேலும் இந்த சீசனில் பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.. தவறாமல் பாருங்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications