விஜய், திரிஷா உறவை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்ல! முட்டு கொடுத்த நாஞ்சில் விஜயன்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் Vijay (விஜய்) மற்றும் அவரது மனைவி Sangeetha Sornalingam (சங்கீதா) குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதிலிருந்து, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் பேசத் தொடங்கினர்.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில் பல கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில், "விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். பல வருடங்களாகவே அவர் என்னிடமிருந்து உணர்ச்சி ரீதியாக விலகி வாழ்ந்து வருகிறார். அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கும் சுற்றி வருகிறார். அந்த பயணங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் எங்கள் குடும்பம் அவமானத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் காரணமாகவே "அந்த நடிகை யார்?" என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

விஜய் திரிஷா கலந்து கொண்ட கல்யாணம்
இந்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விஜய் மற்றும் நடிகை Trisha Krishnan (திரிஷா) இருவரும் ஒன்றாக கலந்து கொண்டது புதிய சர்ச்சையை கிளப்பியது. அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் ஒரே நிறத்தில் பொருந்தும் உடை அணிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்ய ஆரம்பித்தனர். சிலர் நேரடியாகவே "சங்கீதா மனுவில் குறிப்பிடப்பட்ட நடிகை திரிஷாதானா?" என்று கேள்வி எழுப்பினர்.
விஜய் மற்றும் திரிஷா இருவரும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒன்றாக நடித்தவர்கள். Ghilli (கில்லி), Thirupaachi (திருப்பாச்சி), Aathi (ஆதி), Kuruvi (குருவி), Leo (லியோ) போன்ற படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். திரையில் இவர்களின் கூட்டணி ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே இவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் சினிமா வட்டாரங்களில் இதற்கிடையே பேசப்பட்டு வந்ததே உண்மை.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக நடிகை Sanam Shetty (சனம் ஷெட்டி) தனது சமூக வலைதளப் பதிவில் விஜயின் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், "இது சரியான வழி அல்ல. ஒரு மனைவியின் வேதனையை இப்படி புறக்கணிக்க முடியாது. நீண்ட காலமாக விஜய்யின் ரசிகையாக இருந்து வருகிறேன். ஆனால் இந்த நேரத்தில் இப்படிப் பார்க்கும்போது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முன்னதாக விஜய்க்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தபோது சனம் ஷெட்டி அவருக்கு ஆதரவாகவே சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது அவர் கூட அதிருப்தி தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சனம் ஷெட்டி
சனம் ஷெட்டி மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் பலரும் இந்த விஷயத்தை விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். "விவாகரத்து வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும்போது இப்படிச் செய்வது சரியா?", "ஒரு குடும்ப விஷயம் இப்படி வெளியில் பேசப்படும் நிலை ஏன் வந்தது?" போன்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன. சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நாஞ்சில் விஜயன்
இந்த விவகாரத்தில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான Nanjil Vijayan (நாஞ்சில் விஜயன்) ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் அவர், "கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். விஜய்யும் திரிஷாவும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களைப் பற்றி யூகித்து பேசுவது சரி அல்ல. சிலர் அண்ணே உங்களை எப்படி நினைச்சோம் நீங்க இப்படி பண்ணிட்டீங்களே, உங்களுக்கு எதிரி வேற யாரும் இல்ல நீங்க தான் என்றெல்லாம் சொல்லுறாங்க...
விஜய் அரசியலுக்கு வந்து விட்டால் அவருடைய அரசியல் கொள்கையை விமர்சிங்க, அவர்களுடைய அரசியல் பேச்சை விமர்சிங்க, ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் எந்த தகுதியும் இல்லை! விஜய்க்கும் திரிஷாவிற்கும் என்ன உறவு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் பல படங்களில் ஒன்றாக நடித்தவர்கள். அதனால் நெருங்கிய நண்பர்களாக கூட இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "ஒருநாள் அவர்கள் தாமாகவே எங்களுக்குள் இப்படிதான் உறவு என்று சொன்னால் அப்புறம் நாம் அதைப் பற்றி பேசலாம். அதற்கு முன்பே கதைகள் உருவாக்கி விமர்சிப்பது தேவையற்ற விஷயம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் இரண்டு விதமாக பேசப்படுகிறது. ஒருபுறம் விஜயின் இந்த செயலை விமர்சிக்கும் குரல்கள் அதிகமாக இருக்க, மறுபுறம் "உண்மை என்ன என்பதை அறியாமல் ஒருவரை குற்றம் சாட்டுவது தவறு" என்று கூறி அவரை ஆதரிக்கும் கருத்துகளும் வெளியாகி வருகின்றன.
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த சர்ச்சை இன்னும் எவ்வாறு திருப்பம் எடுக்கும் என்பது குறித்து ரசிகர்களும் சினிமா வட்டாரங்களும் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications