எல்லாப் புகழும் கலாய்ப்பவர்களுக்கே.. ஆங்கர் பிரியங்கா
சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளினிகளில் டிடிக்குப் பிறகு அவரின் இடத்தில் இப்போது எப்போதும் பிசியாக இருப்பவர் பிரியங்கா. சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தனக்கான அடையாளம் தேடித்தான் வந்தார்.
அதே போல சிறந்த தொகுப்பாளினிக்கான விஜய் டிவி அவார்டும் கிடைச்சுது பிரியங்காவுக்கு. இப்போது விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பிரியங்கா இருக்கிறார்.
இவருக்கு இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். அதே போல காமெடி ஷோக்களில் நடுவராக இருந்த இவர் வாய்விட்டு அதிரடியாக சிரிப்பார். அதை பார்த்தே மற்ற நடுவர்கள் கிண்டலடித்து சிரிப்பது கூட உண்டு.

பிக் பாஸ் கலாய்ப்பு
பிக் பாஸ் 3 தமிழ் சீசனில் கேம் ஷோ ஒன்றின் ப்ரோமோவுக்காக பிக் பாஸ் ஹவுஸ் வந்திருந்தார்கள், விஜய் டிவியின் தொகுப்பாளர்கள். அப்போது சோஃபாவில் உட்கார்ந்த பிரியங்கா அதை டேமேஜ் செய்துவிட்டார். இதை பிக் பாஸ் கூட தனது குரலில் "பிரியங்கா சிரமமே இல்லாமல் சோஃபாவை டேமேஜ் செய்ததற்கு நன்றி' என்று பிக் பாஸ் கலாய்த்து இருந்தார். அப்போதும் பிரியங்கா அசராமல், சரி பிக் பாஸ் டேமேஜுக்கு எவ்வளவோ அவ்வளவை எடுத்துக்கோங்க என்று கவுன்டர் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

சூப்பர் சிங்கர்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள் செய்யும் சுவாரஸ்யங்கள் ஒரு புறம் இருக்க, இவரை போட்டியாளர்கள் உட்பட பலரும் கலாய்ப்பது வேடிக்கையாக இருக்கும். இவரும் சளைக்காமல் கலாய்ப்பார். ஆனால், கோவமே வராது. எப்போதும் சிரித்த முகம்தான்.

வருத்தம் உண்டா
இப்படி ஆளாளுக்கு மரண கலாய் கலாய்க்கிறார்களே உங்களுக்கு வருத்தம் இருந்ததுண்டா என்றால் எதுக்கு.. இதெல்லாம் சும்மா ஜாலிக்குத்தானே என்று கூறுகிறார். வீட்டில் தனியாகப் போயி கதவை சாத்திக்கிட்டு ஃபீல் பண்ணி இருக்கிறீர்களா என்று கேட்டபோது...

எப்போதும் இல்லை
பட்டுன்னு கேளுங்க.. பாத்ரூமில் கதவை தாழிட்டு அழுவீங்களான்னு பாத்ரூமில் அழற கேஸ் நான் இல்லை. அம்மா எப்போவாது கேட்பாங்க..என்ன அவன் இப்படி கலாய்க்கிறான்.. நீ எதுவும் சொல்லாம இருக்கேன்னு. இப்போ வடிவேலு சாரை படத்தில் பலரும் கலாய்ச்சாலும் புகழ் என்னவோ வடிவேலுக்குத்தானே..அது மாதிரி என்னையும் நினைச்சுக்குவேன் என்று கூறுகிறார்.
இவரது ஒரே வருத்தம் நேரில் பார்க்கும்போது ஒல்லியா இருக்கீங்க.டிவியில் குண்டா தெரியறீங்கன்னு நேரில் கேட்பாங்க. டிவியில் உலகமே பார்க்க இப்படி யாரும் என்னை கேட்டதில்லை என்பதுதானாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications