கருப்பா குண்டா இருந்தால் கேவலமா.. இந்த காலத்துலயும் இப்படியா விஜய் டிவி? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடைபெற்ற பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகை ஆர்த்தி கருப்பு சாயத்தை முகத்தில் பூசிக்கொண்டு வந்து அவரது நிறத்தை வைத்தும் உருவத்தை வைத்து கேலி செய்யும் வகையில் பேசியதற்கும், பின்னணி இசை ஒலிக்கவிட்டதற்கும் நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

நீயா நாயா

நீயா நாயா

இதில் குறிப்பாக கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சி சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது. குறிப்பாக அழகு, பெண்கள், காதல், திருமணம் தொடர்பான பிற்போக்குத்தனமான கற்பிதங்களுக்கு எதிராக நீயா நானா இருந்திருக்கிறது.

பழமைவாத நிகழ்ச்சிகள்

பழமைவாத நிகழ்ச்சிகள்

நிறம், உடல் எடையை வைத்து இழிவுபடுத்தப்படுவதற்கு எதிராகவே நீயா நானாவில் பல எபிசோடுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இப்படி ஒரு பக்கம் இருக்க அதே விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், சீரியல்களில் பழமைவாதத்தை தாங்கிப்பிடிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

உருவ கேலி நகைச்சுவை

உருவ கேலி நகைச்சுவை

குறிப்பாக விஜய் டிவியில் நடத்தப்படும் கலக்கப்போவது யாரு, கேபிஒய் சாம்பியன்ஸ் போன்று நகைச்சுவை நிகழ்ச்சிகளில் போட்டியாளரின் நிறம், எடையை வைத்து உருவ கேலி நகைச்சுவைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மாறவில்லை.

பிபி ஜோடிகள் 2

பிபி ஜோடிகள் 2

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் ஆர்த்தி - கணேஷ்கர் ஜோடியின் நடனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த சேலையைபோல் மணப்பெண் தோற்றத்தில் வரும் ஆர்த்தி, முகத்தை திறந்தவுடன் அதில் கருப்பு சாயம் பூசப்பட்டு இருந்தது.

கருப்பாக இருந்தால் கேவலமா?

கருப்பாக இருந்தால் கேவலமா?

இதை கண்டு பலரும் கேவலமாக சிரித்து நகைச்சுவை செய்ய பின்னால் ஆர்த்தியின் எடையை கேலி செய்யும் வகையில் யானை கத்தும் சத்தம் ஒலிக்கப்பட்டது. உருவ கேலி என்பது தற்போதெல்லாம் குற்றத்துக்கு இணையாக பார்க்கப்படும் சூழலில் அதை வைத்தே இன்னும் எத்தனை நாட்களுக்கு நகைச்சுவை செய்வீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.

நெட்டிசன்கள் எதிர்ப்பு

நெட்டிசன்கள் எதிர்ப்பு

திருவள்ளுவர், தமிழண்ணை என பல புனித பிம்பங்களை கருப்பு நிற தோற்றத்தில் வடிவமைத்து மக்கள் கொண்டாட தொடங்கிவிட்ட சூழலில், நிறம் உருவத்தை வைத்து கேலி செய்வது தவறு என்று மக்களே உணரும் நிலைக்கு முன்னேறிவிட்ட நிலையில், விஜய் டிவி இன்னும் பழமைவாதத்தை மக்கள் மனதில் விதைப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+