Barathi Kannamma Serial: கண்ணம்மா ம்... என்று கேட்க..அவளும் ம்..னு சொல்ல.. ச்சோ ச்வீட்!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தான் கர்ப்பம் என்று தெரிந்ததும் அடையும் சந்தோசம்..கண்களில் நீரைத் துளிர்க்க வைக்கும் எமோஷன்ஸ் காட்சியாக அமைந்துவிட்டது. குழந்தை வரம் என்பது எத்தனை சந்தோசம் என்பதை உணர்த்தும் காட்சியாக இருந்தது.
கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்று, கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து முடிவு செய்து, ஒரு குழந்தையை தத்து எடுக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து கண்ணம்மாவுக்கே குழந்தை வரம் கிடைத்தால்?
அந்த சந்தோஷம் எப்படிப்பட்டதாக இருக்கும்... அந்த சந்தோஷ காட்சியை அதே எமோஷனோடு காட்சியாக்கி தந்து இருக்கிறது கண்ணம்மா சீரியல் குழு. பார்ப்பவர் கண்களிலும் நீர் பணித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்ணம்மா அறிவுமணி
அறிவு மணி கதாபாத்திரம் சும்மா ஒப்புக்கு சப்பாணி போலத்தான் இருந்து வருகிறது. எப்போதாவது காண்பிப்பார்கள்.. இல்லாவிட்டால் இல்லை. கண்ணம்மா உண்டாகி இருக்காளோ என்று அவளின் நடவடிக்கையை வைத்து கணிப்பதற்கு அறிவுமணியை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வீட்டில் ஒரு நல்ல ஜீவனாகவும் இருக்கிறாள் அறிவுமணி. மெயினாக கண்ணம்மாவை இவளுக்கு பிடிக்கும்.

கண்ணம்மா உண்டாகி இருக்கே
கண்ணம்மா வாந்தி எடுக்கறா.. தாளிக்கற வாசனை பிடிக்கலேன்னு சொல்றா... வெங்காயம் பிடிக்கலைன்னு சொல்றா. விபூதியை எடுத்து வாயில் போட்டுக்கறா...பாரதி டிவியில் சொன்ன சிம்டம்ஸ் எல்லாம் தெரியுதேன்னு சொல்லி, கண்ணம்மா நீ உண்டாகி இருக்கேன்னு சொல்றா அறிவுமணி. நீ வேற அறிவு...அதெல்லாம் இருக்காது..நீ எதையாவது சொல்லி அது ஏமாற்றமா ஆகிடப் போகுதுன்னு சொல்றா கண்ணம்மா.

டெஸ்ட் பார்த்துருவோம்
எதுக்கு சந்தேகம் கண்ணம்மா மெடிக்கல் ஷாப்பில் டெஸ்ட் ஸ்டிக் வாங்கிட்டு வந்து டெஸ்ட் பண்ணி பார்த்துருவோம்னு அழைச்சுட்டு போறா. அதை வாங்கிட்டு வந்து வீட்டில் வச்சு இருக்கும் கண்ணம்மாவுக்குள் படபடப்பு. ஓம் முருகான்னு ஆயிரத்து எட்டு தடவை எழுதறா. காலையில் எழுந்ததும் யூரின் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்னு படுக்கறா.

டெஸ்ட் பாசிட்டிவ்
டெஸ்ட் முதலில் ஒரு கோட்டோடு நிற்க.. கண்ணம்மா புலம்பி அழுவது கஷ்டமா இருக்கு. அப்போ தொட்டிலில் பூ நிறைஞ்சது பொய்யா...கடவுளே என்னை இப்படி ஏமாத்திட்டியே என்று அழ இன்னொரு ரெட் கோட் வருகிறது. அவள் அதிக பட்ச சந்தோஷத்தை எமோஷனாக்கி அறிவுமணியிடம் காண்பிக்க.. இருவரும் சேர்ந்து எமோஷனாகும் தருணம் அருமை. அதிலும் டாக்டர் புருஷன் பாரதியை பீச்சுக்கு அழைச்சுட்டு போயி, மாமா நாடி புடிச்சு பாருங்க.. அது உங்களுக்கு எதோ சொல்ல வருதுன்னு கையை நீட்ட..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications