கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து.... எல்லாருமே ஜட்ஜஸ்!!
சென்னை: கிளிக்கு ரெக்கை முளைச்சா அது பறந்து போற , மாதிரி டான்ஸ் ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர், போட்டியாளர் என்று எல்லாரும் டான்ஸ் ஷோவுக்கே ஜட்ஜாக இருக்கப் போறாங்க
விஜய் டிவியில் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகிறது. விஜய் டிவியில் எப்போதுமே ஜோடி நம்பர் ஒன் என்று சீசன் ஆரம்பிக்கும், இந்த முறை டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்னு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகுது.
இதில் எப்போதும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த டிடி, ஜோடி நம்பர் ஒன்னில் போட்டியாளராக இருந்த சுனிதா, அதே போல போட்டியாளராக இருந்த ஆல்யா மானசா, மகத், மிக முக்கியமாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடுவர்களாக களம் இறங்க உள்ளனர்.

அனுபவம் டிடி
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சி ஒன்றிலேயே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி. இந்த முறை டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவின் நடுவராக பங்கேற்கிறார். இவருக்கு மிக லேட்டாக கிடைத்த அங்கீகாரம் இது என்று கூட சொல்லலாம்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி
ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு சினிமா பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் சாண்டி. அண்மையில் நடைப்பெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 3 யின் ரன்னராக வீட்டினுள் 105 நாட்கள் இருந்து வெளியில் வந்தார். நல்ல திறமையான நடன மாஸ்டர்.

நடிகர் மகத்
நடிகர் மகத் தல அஜீத் மங்காத்தா படத்தில் நடிச்சவர். இவர் பிக்பாஸ் சீசன் 2 ஹவுஸ் மேடாக இருந்து கடுமையான சர்ச்சையில் சிக்கி வெளியேறியவர். இன்னும் சில படங்களில் நடித்து இருக்கும் இவரும் இந்த நிகழ்ச்சியின் ஒரு ஜட்ஜ்.

ஆல்யா சஞ்சீவ்
ஆல்யா மானசா நல்ல டான்சர். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் மூலம் போட்டியாளராக களம் கண்ட மனசா ராஜா ராணி சீரியல் மூலம் சீரியல் நடிகை ஆனார். அப்போது உடன் நடித்த சஞ்சீவுடன் காதல் மலர்ந்து சீரியல் முடிவதற்குள் இருவரின் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இப்போது ஆல்யா சஞ்சீவாக இந்த நிகழ்ச்சியின் ஜட்ஜாக பொறுப்பேற்க உள்ளார்.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications