10 கோடி சொத்துக்கள் கோபிநாத்துக்கு.. சொட்ட சொட்ட வியர்வையோடு.. கரு. பழனியப்பன் மைனஸ் இதுவே: பிரபலம்
சென்னை: கரு பழனியப்பனால், ஜீ டிவியில் நிற்க முடியவில்லை.. இடதுசாரி சிந்தனையாளராக அவர் இருக்கலாம், திமுக அனுதாபியாகவும் இருக்கலாம். ஆனால், அவரது அணுகுமுறை சரியில்லை. பங்கேற்பாளர்கள் தவறான கருத்து சொல்கிறார்கள் என்றால் உடனே அதற்கு கோபிநாத் தடை போடுவார். இதுதான் ஒரு ஆங்கரின் வேலை என்று பாராட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.
Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் அனைத்தும் சலிப்பை தட்ட காரணமே அவர்களது தவறான கான்செப்ட்தான்.. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஆங்கர்கள் ஒரே நபர்களாக வருகிறார்கள். எனவேதான் இன்று பல விஜய் டிவி நிகழ்ச்சிகள் விழுந்துவிட்டன..

கிசுகிசுக்கள், வதந்திகள்
இதன் காரணமாகவே, திட்டமிட்டே கிசுகிசுக்களையும், வதந்திகளையும், விஜய் டிவியில் உள்ளவர்களே பரப்பி விட்டார்கள்.. இவர்களுக்கும், அவர்களுக்கும் சண்டை, தொடர்பு, என்றெல்லாம் பரப்பிவிட்டனர். இதுவும் விஜய் டிவிக்கு கை கொடுக்கவில்லை.
காமெடி என்ற பெயரில் வறட்டுத்தனமான ஜோக்குகளை சொல்வது, மக்களுக்கே எரிச்சலை மூட்டியது.. கலக்க போவது யாரு, அது இது எது என்ற நிகழ்ச்சிகளில் காமெடிகள் அதற்குமேல் மொக்கையாக இருந்தன..
கருணாஸ் மனைவி கிரேஸ்
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கருணாஸ் மனைவி கிரேஸ் எதற்காக பங்கு பெற வேண்டும்? கருணாஸ் ஒரு பெரிய நடிகர்.. ஆனால், அவரது மனைவிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? ஒருமுறை மலேசியா வாசுதேவன் இசை நிகழ்ச்சியில் கிரேஸை கிண்டலாக ஏதோ சொல்லிவிட்டார். அப்போது கடும் கோபம் கொண்டு எதிர்ப்பை தெரிவித்தார் கிரேஸ். ஆனால் அதே பாடிஷேமிங் விஜய் டிவி நிகழ்ச்சியில் செய்தபோது, அதனை சகஜமாக எடுத்துக் கொண்டுவிட்டார்.
ஆபாச கமெண்ட்
சில நேரத்தில் போட்டியாளர்கள் , ஆபாசம் கலந்து ஜோக்குகளை சொல்லும் அளவுக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களிடம் சரக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் சேனலின் மதிப்பும் குறைகிறது. மொத்தத்தில், விஜய் டிவியை பொறுத்தவரை தரமான நிகழ்ச்சியின் தூக்கி நிறுத்தாததும், அதற்காக குறுக்கு வழியை கையாண்டதும் மிகப்பெரிய பலவீனம்..
நீயா நானா கோபிநாத்
நீயா நானா கோபிநாத் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு.. ஆனால், ஒரு டாக் ஷோவை இத்தனை வருடம் வெற்றிகரமாக நடத்துவது என்பது எளிதான விஷயம் கிடையாது.
20 வருடங்களுக்கு முன்பு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வியர்க்க விறுவிறுக்க சொட்ட சொட்ட சட்டையெல்லாம் நனைந்து, பைட் எடுத்த காட்சிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். மூத்த பத்திரிகையாளர்களுக்கு இது தெரியும்.
அவர் 10 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்தாலும், அது அத்தனையும் அவருடைய சிந்தனைக்கும், வியர்வைக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும். இன்னொரு சேனலிலும் அவரை அழைப்பதாக செய்திகள் கசிவதும், அவரது திறமைக்கான வாய்ப்புதான்.
மொழியாற்றல் அபாரம்
விஜய் டிவியில் டாக் ஷோவை 18 வருடமாக கோபிநாத் நடத்தி வருவது பெரிய விஷயம்.. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னணிக்கு வந்தவர் கோபிநாத்.. ஆனால், இதே சன்டிவி அன்று கோபிநாத்தை தவிர்த்தது.
விஜய் டிவியை ஸ்டார் நிறுவனம் வாங்கியதுமே, அங்கு பணியில் இணைந்தார் கோபிநாத்.. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும் பயன்படுத்திக் கொண்டார். எளிய மக்கள், நடுத்தர மக்கள், மேல்தட்டு மக்கள் என 3 தரப்பு மக்களிடமும் நிகழ்ச்சியை கொண்டு போய் சேர்த்தார்.. அவரது மொழியாற்றல், கண்டெண்ட்களை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார்..
நிலைக்காத கரு பழனியப்பன்
ஒரு பள்ளி, கல்லூரியில் கோபிநாத்தை அழைத்து பேசும்போது, அந்த பள்ளிக்கு மதிப்பு கூடுகிறது.. அரசியல் சாராமல், நியாயமான பேச்சாகவும், மோடிவேஷனல் பேச்சாகவும் பேசுகிறார்.. இத்தனைக்கும் நான் அவரிடம் பழகியதில்லை. கலைஞர் தோள்மீது கை வைத்து பேசும்போதே அவர் திறமையானவர் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஆனால், இதே கரு பழனியப்பனால், ஜீ டிவியில் நிற்க முடியவில்லை.. இடதுசாரி சிந்தனையாளராக அவர் இருக்கலாம், திமுக அனுதாபியாகவும் இருக்கலாம். ஆனால், அவரது அணுகுமுறை சரியில்லை. பங்கேற்பாளர்கள் தவறான கருத்து சொல்கிறார்கள் என்றால் உடனே அதற்கு கோபிநாத் தடை போடுவார். இதுதான் ஒரு ஆங்கரின் வேலை.
ஆனால், தனக்கு எது சரியென்று படுகிறதோ, அதையே மற்றவர்களிடம் பேசவைத்தவர் கரு பழனியப்பன். அதனால்தான், ஜீ தமிழில் கரு.பழனியப்பனால் நிற்கமுடியவில்லை.
இப்போது அம்பானி கைக்கு சேனல் செல்கிறது. இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு விஷயத்தில் திறமைசாலிகளை தேர்வு செய்யலாம்.. அந்தவகையில் கோபிநாத்தையும் தேர்வு செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications