அந்த பழைய மொந்தையை எடுங்க.. இந்த கள்ளை ஊத்துங்க.. ஆஹா பார்முலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்லாட் கொடுப்பதில் மிகவும் கவனமாக செயல்படும் விஜய் டிவி,ஸ் லாட்டை வாங்கியவர்களிடம் 'ரொம்ப சீன போடாதீங்க" என்று சொல்லவும் தயங்குவதில்லையாம்.

இதுல தப்பு ஒன்னும் இல்லை, அதாவது, கம்மி விலைக்கு ஸ்லாட் வாங்குறீங்க, விளம்பரம் போதுமான அளவு வரதே இல்லை.. நீங்க பாட்டுக்கு லொக்கேஷன் அங்க வைக்கிறேன், இங்க வைக்கிறேன்னு தேடிப் புடிச்சு செலவு இழுத்து விடாதீங்க.

டக்டக்குன்னு சீனை மாத்தி, பட்ஜெட் பத்தலை, வருமானம் பத்தலைன்னு கையைப் பிசைந்தா எங்களால நஷ்ட ஈடெல்லாம் தர முடியாது. பார்த்து சூதானமா சீரியல் எடுங்க... நாங்கதான் டைம் அட்ஜஸ்ட் பண்ண விஜய் பைட்னு போட்டுக்கறோமேன்னு அட்வைஸ் பண்ணிருவாங்களாம்.

(அதனாலதானோ என்னவோ, டைனிங் டேபிள் சீன் மட்டுமே ரெண்டு எபிசோட் ஓடும்!)

 புளிக்காம அரைங்க

புளிக்காம அரைங்க

அது மட்டுமா, கதைக்கு அப்படி இப்படின்னு மண்டையைப் பிச்சுக்க வேணாம்.அரைச்ச மாவையே அரைங்க. புதிய மொந்தையில பழைய கள்" னு சொல்லுவாங்களே, கருப்பு பொண்ணு வெள்ளை மனசு, பணக்கார பொண்ணு ஏழை பையன், வீட்டுக்கு வந்த வேலைக்காரி எஜமானியாகும் கதை. இப்படிப்பட்ட கதைகளா தூசி தட்டி எடுங்க. சினிமா பட டைட்டிலை வைங்க, டைட்டிலை ஒட்டி ரொம்ப சிம்பிளா கதையை பின்னுங்க.ரொம்ப நடிகர், நடிகைகளுக்கு மெனக்கெடாதீங்க.

 அவங்கதான் நம்ம சாய்ஸ்

அவங்கதான் நம்ம சாய்ஸ்

இருக்கவே இருக்காங்க புதுமுகங்கள். அவங்களை ஹீரோயினாவும், வில்லி, வில்லன், சைடு ஆக்டர்ஸ் வேணும்னா, மார்க்கெட் போய் வீட்டுல உட்கார்ந்து இருப்பாங்க பாருங்க அவங்களை புடிங்கன்னு சொல்லிடறாங்களாம். இப்படிப்பட்ட கண்டிஷன்ல உருவானதுதான், சின்ன தம்பி, ராஜா ராணி, மவுன ராகம், அரண்மனைக் கிளி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று இப்படி வரிசையாக சொல்கிறார்கள். நாங்களும் போட்டியில் இருக்கோம்ன்றதுதான் சீரியல் விஷயத்துல விஜய் டிவியின் கொள்கையாம்.

 ஜீ தமிழ் டிவி

ஜீ தமிழ் டிவி

இதையே கிட்டத்தட்ட வேத வாக்காக எடுத்துக்கொண்டு ஜீ தமிழ் டிவி கடைபிடித்து வருவதால் இரண்டுக்கும் சரியான போட்டி என்று ஒரு கருத்தை உலவ விட்டு இருக்கிறார்களாம் இரு சாராரும். விஜய் டிவி வியூவர்ஸ் இது போல கதைக்காகத்தான் காத்து இருக்காங்களாம். சின்ன சின்ன ஊடல், கூடல்,சண்டை, சச்சரவு,போட்டி, பொறாமை இவைகளைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது பொதுவான ரசிகர்கள் மனப்பான்மையும் கூட.

 கொலை, ஆள் கடத்தல்

கொலை, ஆள் கடத்தல்

ஒருபக்கம், அதிரடி கதைகள், பதற வைக்கும் காட்சிகள், கொலை, ரவுடி கும்பல்களின் ஆள் கடத்தல் அடிதடிகள் என ஒரு டிவி சளைக்காமல் சலிக்க வைக்கும் வகையில் அதகளம் செய்து கொண்டிருப்பதால், நெஞ்சு படபடக்க அதைப் பார்த்து டென்ஷனவாதற்கு ஜாலியா இதைப் பார்த்து விட்டுப் போய்ரலாமே என்று எண்ணும் ரசிகர்கள் 'வாட்சிங் ஒன்லி விஜய் டிவி" என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+