கோபிநாத்தை திகைக்க வைத்த சுஹாசினி.. விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் உருக வைத்த வாணியம்பாடி பெண்
வேலூர்: வாணியம்பாடியில் பிளஸ் 2 தேர்வு அன்று அரசு பஸ்ஸை தவறவிட்டு, பிறகு பஸ்ஸை துரத்திக்கொண்டு சென்று, அதில் பயணித்த மாணவி சுஹாசினி.. பஸ்ஸை துரத்தி சென்று, ஆபத்தான முறையில் பயணித்த மாணவியின் வீடியோ இணையத்திலும் வெளியாகியிருந்தது. இப்போது விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில், இந்த மாணவி பங்கேற்று பேசியிருக்கிறார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுஹாசினி.. இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக, வீட்டில் இருந்து புறப்பட்டு, கிராமத்தின் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து நிற்கவில்லை. மாணவி சீருடையில் இருப்பதை கவனித்தும் கூட, டிரைவர் பஸ்ஸை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார்.. இதனால் பதறிப்போன மாணவி சுஹாசினி, பின்னாடியே வேகமாக ஓடிசென்றார்.. படியிலுள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, ஆபத்தான முறையில் நீண்ட நேரம் ஓடி, அதற்கு பிறகு பஸ்ஸில் ஏறினார்..
இந்த காட்சிகளை, பஸ்ஸூக்கு பின்னாடியே பைக்கில் வந்த நபர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தனர்.. இதைப்பார்த்து பொதுமக்கள் கொந்தளித்து போனார்கள்..
கொந்தளித்த பொதுமக்கள்
மாணவி ஓடிவரும்போது விபரீதம் ஏற்பட்டிருந்தால் என்னாவது? சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கொந்தளித்தார்கள்.. இதையடுத்து, டிரைவர் முனிராஜை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்..
அதேபோல, கண்டக்டர் அசோக் குமார் , காண்டிராக்ட் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர் என்பதால், அவர் பணியில் இருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டார்.. சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன..
அதில் சுஹாசினி 437 மதிப்பெண் பெற்றிருந்தார்..
பஸ் ஸ்டாப்பிங்
இந்நிலையில், கோபிநாத் நடத்திய நீயா நானா நிகழ்ச்சியில் சுஹாசினி பங்கேற்றிருந்தார்.. அப்போது கோபிநாத்திடம் சுஹாசினி சொல்லும்போது,
வழக்கமாக 8.10-க்கு பஸ் வரும்.. அன்றைய தினம் எனக்கு பரீட்சை என்பதால், 7.50-க்கே வீட்டிலிருந்து கிளம்பி பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
ஆனால், பஸ் வந்தும்கூட ஸ்டாப்பிங்கில் நிற்கவில்லை.. இதனால் பரீட்சை எழுத முடியாதோ என்று நினைத்து, பயத்திலேயே பஸ் பின்னாடியே ஓடிப்போய் ஏறினேன்.. அதைவிட்டால், அந்த பஸ்ஸை விட்டால் 9 மணிக்கு மேல் தான் வரும்.. சில சமயம் பஸ்கள் வராது.. என் குடும்பத்தில் பள்ளிக்கூடம் சென்று படிப்பதே நான் ஒருத்திதான்..
ஆட்டோவுக்கு காசு இல்லை
இந்த பதற்றத்துடன்தான் அன்னைக்கு எக்ஸாம் எழுதினேன்.. பதற்றம் இல்லாமல் இருந்தால், இன்னும்கூட நான் மார்க் எடுத்திருப்பேன். என் அப்பாவுக்கு அடிபட்டு படுக்கையில் உள்ளார்.. நான் படித்து தலையெடுத்தால்தான், குடும்பத்தை பார்க்க முடியும்.. பஸ்ஸை தவறவிட்டாலும் ஆட்டோவில் செல்ல காசு என்னிடம் இல்லை.. அதனால்தான், அவ்வளவு வேகமாக பஸ்ஸை துரத்தி கொண்டு ஓடினேன்.
கண்கலங்கிய கோபிநாத்
எனக்கு பஸ்ஸை நிறுத்தாமல் போனதால், டிரைவரை சஸ்பெண்டு செய்துவிட்டார்கள்.. அவர் செய்தது தவறுதான், ஆனால் என்னால்தானே வேலை போய்விட்டது? என்று உறுத்தலாகிவிட்டது.. என்னை போலவே அவர் வீட்டிலும் பிள்ளைகள் இருப்பார்களே? வேலை இல்லாமல் என்ன செய்வாரோ? என்ற வருத்தம் வந்தது" என்றார் சுஹாசினி.
இதைக்கேட்டதும் கண்கலங்கிய கோபிநாத், இந்த நெருக்கடியிலும், அடுத்தவர் குடும்ப சூழலை நினைத்து பார்க்கிறாரே சுஹாசினி? படிப்பு என்பது இதுதான்" என்று நெகிழ்ந்து கூறினார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications