நீயா நானா இனி வராதா? விஜய் டிவி "அவங்க" கையில் போயிருச்சு.. அதுவும் ஒரே மாதிரி பிராண்டுன்னு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியை அம்பானியின் ஜியோ நிறுவனம் வாங்கியது. இதனால் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் "ஜியோ ஹாட்ஸ்டார்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அம்பானிக்கு சொந்தமாக கலர்ஸ் என்கிற சேனல் உள்ள நிலையில், இப்போது விஜய் டிவியையும் அந்த நிறுவனம் வாங்கியிருப்பதால், விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகின்றன.. படங்கள் மட்டுமின்றி விஜய் டிவி நிகழ்ச்சிகளும் கலர்ஸ் டிவியிலேயே ஒளிபரப்பாக உள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து கூறியிருக்கிறார்.

2nd Floor Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "விஜய் டிவி சொத்துக்கள் என்று சொல்லப்படும் நீயா நானா, பிக்பாஸ், போன்றவை முக்கிய நிகழ்ச்சிகள் கலர்ஸ் சேனலுக்கு போகிறது. முதன்முதலில் பூமாலை என்ற சன் டிவி, விஜய் டிவி, ராஜ்டிவி என்ற இந்த 3 டிவிக்கள்தான் இங்கு இருந்தன.

Television Vijay TV Neeya Naana

ஆரம்பக்கால விஜய் டிவி

30 வருடம் முன்பு, விஜய் டிவியில் சினிமா பாடல்களாகவே ஓடிக் கொணடேயிருக்கும். பிறகு சில குறிப்பிடட படங்களையே திரும்ப திரும்ப போட்டு கொண்டிருப்பார்கள்.. ஸ்டார் விஜய் என்று கார்ப்பரேட்டுக்கு சென்றபிறகுதான், நிகழ்சசிகள் வர ஆரம்பித்தன.. கலக்க போவது யாரு, அது இது எது, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என்று மக்களை ரசிக்கக்கூடிய முழுக்க முழுக்க கமர்ஷியலை கொண்டு வந்தார்கள். அதுக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருக்க முடியாது..

நீயா நானா கோபிநாத்

உதாரணத்துக்கு நீயா நானா நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால், கோபிநாத் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை.. எல்லா வகையான டாபிக்குகளையும் எடுத்து விவாதித்தாகிவிட்டது. எல்லா தலைப்பிலும் பேசியாச்சு.. அதிலும் வருஷக்கணக்காக பேசியாகிவிட்டது. இதுபோக , நீயா நானா போன்ற விவாத நிகழ்ச்சிகளை மற்றவர்களும் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்..

ஒருகட்டத்தில் இதுபோன்ற பிராண்டு கீழே விழும்போது, மாற்றத்தை தேட வேண்டியிருக்கிறது. கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர், என எந்த பிராண்டாக இருந்தாலும், வேற கான்செப்ட்டுக்குள் போக வேண்டியிருக்கு..

பிக்பாஸ் பிராண்டு விழுந்தது

இதில் பிக்பாஸ் பிராண்டும் கீழே விழுந்துவிட்டது.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் அரசியலில் சறுக்கல் ஏற்பட்டது.. அரசியல் வீழ்ச்சி, படங்களின் இழப்பு, வீடு ஏலம் போனது என பல்வேறு சிக்கல்கள் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகினார். கமலுக்கு பதிலாக யார் தொகுத்து வழங்கலாம்? என்ற ஆப்ஷன் என்னிடம் கேட்கப்பட்டது., அதற்கு நான் சிம்பு பெயரை சொல்லியிருந்தேன்.

விஜய் சேதுபதி அற்புதமான நடிகர் என்ற தகுதி மட்டுமே என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த போதாது. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கலர்ஸ் ஒளிபரப்பியது.. பொதுவாக, கலர்ஸ் சேனலில் எலலாமே வித்தியாசமாக இருக்கும்.. இப்போது சினிமா, வெப்சீரிஸ்கள் கார்ப்பரேட் கையில் போய்விட்டது. விஜய் டிவி ஏற்கனவே கார்ப்பரேட் என்றாலும், படைப்பு சுதந்திரம் என்பதும் வேண்டும்..

ஜோடி நம்பர் 1

வியூவர்ஸ் குறிப்பிட்ட அளவு வந்தாக வேண்டும் என்ற டார்கெட்டும் நியமிக்கப்படுகிறது. கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வேறு வேறு திறமைசாலிகளை கொண்டு வராமல், ஒரே மாதிரியான நபர்களையே கொண்டு வந்து நடத்துகிறார்கள். நீயா நானா நிகழ்ச்சியிலும் ஏற்கனவே பங்கேற்றவர்களையே பங்கேற்க வைக்கிறார்கள்.. ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சிகளிலும் அதே நடுவர்கள் ஒவ்வொருமுறையும் வருகிறார்கள். இதனால் பிராண்டு விழத்தான் செய்யும்.

இந்த உலகம் மிகப்பெரியது.. அனைத்தையுமே கடந்து போய் கொண்டேயிருக்க வேண்டும். எனவே, வாய்ப்பு இருக்கும்போது ஒன்றை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+