ஒன்ஸ் சான்ஸ் கொடுத்துட்டா விஜய் டிவி கை விடவே மாட்டாங்க!
Recommended Video
சென்னை: விஜய் டிவியில் வேலை பார்த்தவர்களுக்கு அல்லது ஏதாவது ஒரு விதத்தில் விஜய் டிவி மூலம் பிரபலமானவர்களுக்கு என்று எப்போதும் கை கொடுப்பது என்கிற ஒரு பாலிசியை விஜய் டிவி கடைப்பிடித்து வருகிறது.
இது அன்றைய டிடி முதல் இன்றைய ஜாக்குலின் வரை அனைவருக்கும் பொருந்தும். சீரியல் நடிகர் நடிகைகளுக்கு கூட இது பொருந்தும்.
நடுவுல கொஞ்ச நாட்கள் இவங்களை காணோமே என்று நாம் நினைத்து இருந்தாலும் அவங்களை ஹாயா கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுக்க வச்சுட்டு மறுபடியும் கூப்பிடுவாங்க.

தொகுப்பாளர் திவ்யதர்ஷினி
கிட்டத்தட்ட 20 வருடங்களாக விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக திவ்யதர்ஷினி கோலோச்சி வருகிறார். இவருக்கு நிகராக இத்தனை ஆண்டுகள் விஜய் டிவியில் மட்டுமல்ல, எந்த தொலைக் காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக யாரும் வலம் வந்ததில்லை.

டிடிக்கு கல்யாணம்
டிடிக்கு கல்யாணம் ஆன நிலையில், பிரியங்கா பிசியாக நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். அதோடு ஜாக்குலினும் களம் இறங்கி இருந்தார். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கும் ஒரு சில மாதங்கள் விடை கொடுத்து இருந்தார்கள். கல்யாணம் ஆன கையோடு அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்துவிட்டு நிறைய நாட்கள் ஓய்வில் இருந்தார்.

சிறப்பு ஜட்ஜ்
பொறுத்திருந்த விஜய் டிவி காமெடி நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு ஜட்ஜாக அழைப்பு விடுத்து டிடியை கவுரவித்தது. அவ்வப்போது காபி வித் டிடி என்று சிறப்பு விஐபிக்களை நேர்காணலும் செய்து வந்தார்.அடுத்த சில மாதங்களில் எப்போதும் போல நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணியை விஜய் டிவி அவருக்கு வழங்கி உள்ளது.

மகாபா ஜெகன்
இப்படித்தான் நடிகர் ஜெகனை கூட விஜய் டிவி அவர் சும்மா இருந்தால் விட்டு வைப்பதில்லை. மகாபா, பிரியங்கா இவர்கள் எல்லாம் டிடி போல விஜய் டிவியில் ஸ்ட்ராங்காக காலூன்றி விட்டார்கள். சீரியல் நடிகர் நடிகைகளும் அப்படித்தான்.. மைனா நந்தினி, ஆல்யா மானஸா, கிரேஸ் என்று இப்படி வரிசையாக சொல்லலாம்.
தன்னை நம்பினோரை விஜய் டிவி கை விடுவதில்லை என்கிற பாலிசியை அது கடைப்பிடித்து வருகிறது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications