Vijay tv Ramar: எனக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது! குடியை விட்டுருங்க.. கண் கலங்க பேசிய விஜய் டிவி ராமர்
சென்னை: விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு?' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் ராமர், தனது சமீபத்திய நேர்காணலில் மதுப் பழக்கத்தை நிறுத்தியது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்தக் கருத்து, இணையத்தில் வைரலாகப் பரவி வருவதோடு, குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களின் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது.

ராமர் சிரிப்பு கலையின் நாயகன்
நடிகர் ராமர், விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு'*நிகழ்ச்சி மூலமாக நகைச்சுவை உலகில் தன்னை வெளிப்படுத்தியவர். தனது இயல்பான காமெடி டைமிங், யதார்த்தமான நடிப்பு, மற்றும் எளிமையான தோற்றம் ஆகியவற்றால் அவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். சின்னத்திரையில் மட்டுமின்றி, தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நகைச்சுவை ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரின் எப்போதும் சிரித்த முகம் அனைத்து ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலம்.
மதுப்பழக்கமும், குடும்பத்தின் வலியும்
சிரிப்பால் மக்களை மகிழ்விக்கும் ராமர், தன் வாழ்வில் தான் சந்தித்த ஒரு இருண்டப் பக்கத்தைப் பற்றி உணர்வுப்பூர்வமாகப் பேசியுள்ளார். "நிறைய பேர் தனது மனைவி, பிள்ளைகளை எல்லாம் மறந்துவிட்டுத் தனது சந்தோஷத்துக்காகக் குடிக்கிறாங்க. நானும் அப்படி இருந்தவன்தான்," என்று தனது பழையப் பழக்கத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
மகனின் வார்த்தை
ராமரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது எது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். "ஆனா, என் பையன் என்னை கட்டிப்பிடிச்சு 'குடிக்காதீங்க அப்பா'ன்னு சொன்னான். அன்றிலிருந்து நான் குடிக்கிறதையே விட்டுட்டேன்," என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

மதுவின் தீமைகள்
ராமரின் இந்தக் கருத்து, சமுதாயத்தில் மதுவால் ஏற்படும் பாதிப்புகளின் ஆழத்தை உணர்த்துகிறது. மதுப் பழக்கம் தனிநபரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தின் மகிழ்ச்சியையும், சமூக மரியாதையையும் சிதைக்கிறது. குடிப்பவரின் குடும்பத்தினர் - குறிப்பாக மனைவி மற்றும் குழந்தைகள் - தினமும் அவமானங்களையும், அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. குடும்ப வன்முறைக்கும், பொருளாதாரச் சீரழிவுக்கும் மதுவே முக்கியக் காரணமாக அமைகிறது.
உடல்நலக் கேடு
குடியால், கல்லீரல் பாதிப்பு, இருதய நோய்கள், புற்றுநோய் போன்றக் கொடிய நோய்கள் ஏற்பட்டு, குடிப்பவரின் உயிரையேப் பறிக்கும் அபாயம் உள்ளது. தனதுத் தனிப்பட்ட அனுபவத்தை முன்வைத்து ராமர் வைத்த கோரிக்கை, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஒரு வலிமையானச் செய்தியாகும். "தயவுசெய்து உங்களுடையக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காவது குடியை நிறுத்துங்க..." என்று அவர் கண்ணீருடன் அளித்த இந்தக் கோரிக்கை, சமுதாயத்தில் இந்த அவலத்தைப் போக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு நகைச்சுவை நடிகரின் இந்த உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு, பலரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications