வெந்த காலிஃபிளவரா? மார்க்கெட்ல வாங்கின மாதிரியே ஃபிரஷா இருக்கு...!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சும்மாவே விஜய் டிவி ஒரு ஷோவை ஓயாம ஓயாம மறு ஒளிபரப்பு செய்து வருவாங்க.இப்போ லாக்டவுன் நேரம் வேற...கேட்கணுமா?
சூப்பர் ஹிட் ஷோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்து வருது விஜய் டிவி. இந்த ஷோவை பார்க்க மக்களுக்கு ஏக குஷிங்க...காரணம் நம்ம ரம்யா பாண்டியன்.
ரம்யா பாண்டியன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிக்பாஸ் அளவுக்கு புகழுக்கு போயிட்டார். வழக்கமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளருக்கு கிடைக்கும் வரவேற்பு விஐய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரம்யாவுக்கு கிடைச்சு இருக்கு.

அருண்பாண்டியன் சித்தப்பாவாமே...!
நடிகை ரம்யா பாண்டியனுக்கு நடிகர் அருண் பாண்டியன் சித்தப்பாவாம். இந்த தகவலை அவரே தமது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு இருக்கார். சித்தப்பா அருண் பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு. என் சித்தப்பா என்றும் கூறி இருக்கார்.

ஜோக்கர் படம்
ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்துக்கு முன்னரே தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனாலும், ஜோக்கர் படம்தான் இவருக்கு கொஞ்சம் புகழையும், அடையாளத்தையும் தந்து இருந்தது. இந்த நேரத்தில்தான் ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக்கரி ஷோவான குக்கு வித் கோமாளியின் போட்டியாளராக பங்கேற்றார்.

கோமாளிகள் புகழ் பாலா
கோமாளிகளாக புகழ், பாலா,பிகிலி ரமேஷ், மணிமேகலை, ஷிவாங்கி என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர். என்றாலும் ரம்யாவுடன் ஜோடி சேர வேண்டும் என்று புகழ், பாலா இருவரும் போட்டி போடுவார்கள்.. அதோடு நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் கூட அவர் பங்குக்கு ரம்யாவிடம் அடிக்கடி சென்று பேச்சுக்கொடுத்து வழித்துக்கொண்டு இருப்பார்.

காலிஃபிளவர் ஃபிரை
ரம்யாவுக்கு கோமாளி புகழ் ஜோடி சேர்ந்து இருக்க... இருவரும் சேர்ந்து காலிஃபிளவர் ஃபிரை செய்து வைக்கிறார்கள். அப்போதுதான் செஃப் தாமு கேட்கிறார்...ரம்யா உங்களுக்கு 45 நிமிஷம் கொடுத்தோம். அப்போதும் கூடவா காலிஃபிளவர் வேகலை என்று. ஒரு பீஸ் எடுத்து வாயில் வச்ச ரக்ஷன் என்னது மார்க்கெட்டில் ஃபிரஷா வாங்கின மாதிரியே இருக்குதேன்னு சொல்கிறார். எப்போதும் ரம்யா முகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தா காலிஃபிளவர் எப்படி வேகும்னு செஃப் வெங்கடேஷ் கேட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications