சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்.. நான் ரோகிணியின் மாமா இல்ல, உண்மையை சொன்ன மணி.. விஜயா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி பற்றிய உண்மைகளை கறிக்கடைக்காரர் மணி அண்ணாமலை குடும்பத்தினரும் வந்து சொல்லி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த சம்பவம் அடுத்த வாரத்தில் நடக்கப் போவதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இது கனவாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற சிந்தனை தான் எல்லோருக்கும் வருகிறது. காரணம் ப்ரோமோவில் காட்சிகள் அப்படி இருக்கிறது.

சிக்காத மணி
ஏற்கனவே போன வாரத்தில் பரசுவின் மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரர் முத்துவிடம் சிக்குவது போன்று காட்சிகள் இருந்தது. இதனால் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியவரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பு காத்திருந்தனர். ஆனால் ஒவ்வொரு நாளும் ஏமாற்றம்தான் கிடைத்தது. அண்ணாமலை குடும்பத்தினரின் கண் முன்பே கறிக்கடைக்காரர் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார். ஆனால் கடைசி வரைக்கும் அவரை யாரும் பார்க்கவில்லை.
முத்து மீனா செய்த செயல்
இந்த நிலையில் தான் இன்றைய எபிசோட்டில் பரசுவின் மகள் திருமண மண்டபத்திற்கு திருடுவதற்காக ஒரு கணவன் மனைவி வந்திருந்தனர். அவர்களிடமிருந்து நகைகளை முத்துவும் மீனாவும் காப்பாற்றி இருக்கிறார்கள். அது பற்றி மாப்பிள்ளைக்கு மாமாவான கறிக்கடைக்காரரிடம் பரசு பெருமையாக சொல்கிறார். உடனே மணி நான் அந்த ரெண்டு பேரையும் பார்த்து நன்றி சொல்லணும் என்று கிளம்புகிறார்.
வீட்டை விட்டு துரத்தும் விஜயா
இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலையின் வீட்டிற்கு வந்த கறிக்கடைக்காரர் என்னை மன்னிச்சிடுங்க நான் ரோகிணியின் மாமா கிடையாது என்று கையெடுத்து கும்பிட்டு பேசுகிறார். இதை எதிர்பார்க்காத விஜயா ரோகிணியின் தலைமுடியை பிடித்து இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது வெளியே போ என்று தள்ளுகிறார்.
கனவு நிஜமாகுமா
ஏற்கனவே இது போல பலமுறை ரோகிணி தன்னை வீட்டை விட்டு துரத்துவது போலவும், தன்னை பற்றிய உண்மைகள் தெரிய வருவது போன்றும் கனவு கண்டிருக்கிறார். அதனால் இந்த முறையும் கனவு தானா? அல்லது நிஜத்தில் ரோகிணி பற்றிய உண்மைகள் உடைய போகிறதா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரோகிணி வீட்டில் தான் இருக்கிறார்.
புரியாத புதிர்
அதனால் இது கனவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுபோல பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முத்துவின் பாட்டியும் வந்திருக்கிறார். அவரோடு ரவி ஸ்ருதியும் இருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் ரவியும் ஸ்ருதியும் ஹனிமூன் கிளம்பி இருக்கிறார்கள். இதனால் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
பலமுறை ஏமாற்றம்
ஏற்கனவே பலமுறை ரோகிணி மாட்டுவது போன்று ஏமாற்றமும் செய்து விட்டார்கள். அதனால் இந்த முறையாவது ஏமாற்றாமல் ரோகிணி பற்றிய விஷயத்தில் பாதியாவது கொண்டு வர வேண்டும் என்பது பலருடைய விருப்பமாக இருக்கிறது. இதுவரைக்கும் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல்தான் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்தது.

டிஆர்பியில் சரிவு
ஆனால் கடந்த வாரத்தில் சின்ன மருமகள் சீரியல் சிறகடிக்க ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி இருக்கிறது. அதுபோல இதேபோன்று ஏமாற்று வேலைகளை அடிக்கடி காட்டிக் கொண்டே இருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். இது டிஆர்பியில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications