Pandian Stores Serial: காரைக்குடியில் இணைந்த விஜய் டிவி சீரியல் குடும்பங்கள்!
சென்னை: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாலை 4 மணிக்கு மறு ஒளிபரப்பாகி வருது. இந்த வாரம் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம், மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பம் இரண்டும் காரைக்குடி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப இல்லத்தில் இணைகிறார்கள்.
பாரதி, கண்ணம்மா, அகிலன், அஞ்சலி நால்வரும் காரைக்குடிக்கு வந்தவங்க, தங்க இடம் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். கதிரை பாரதியின் கார் இடித்துவிட, அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு அறிமுகம் ஆன பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பம், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் தங்கி விடுகிறார்கள்.
அப்புறம் என்ன..ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள் ஒற்றுமை ஆனந்தம் பட ரேஞ்சில் அனைவருக்கும் தெரியும்படி.. அனைவரும் விரும்பும்படி இருக்கும். இதை பார்க்கும் பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பம் சிலிர்த்து போவதைத்தானே எபிசோட் முழுக்க காண்பித்து இருக்கிறார்கள்.

சாப்பாடு சூப்பர் மாமா
பாரதி, கண்ணம்மா, அகிலன், அஞ்சலி நால்வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்போதுதான் தட்டை கையில் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடும் கண்ணம்மா, சாப்பாடு சூப்பரா இருக்கு மாமா என்கிறாள். அவனும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, ஆமாம் கண்ணம்மா என்கிறான்.

பாரதி கண்ணம்மா குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் ஒரு ஆனந்தம் படம் போல குடும்பம் என்றால், பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பம் மாமியாரா மருமகளா பார்த்துடலாம் என்பாத்து போன்ற எண்ணத்துடன் இருக்கும் மாமியார் எதற்கெடுத்தாலும் மருமகளிடம் போட்டி போடும் குடும்பம். இப்படியான இரு குடும்பங்களும் சங்கமிக்கும் சீசன் இது.

கூட்டு குடும்பம்
சாப்பாடு நல்லாருக்கு என்று முல்லையிடம் கண்ணம்மா சொல்ல, தேங்க்ஸ் என்று சொல்கிறாள் முல்லை. எங்க மத்த ரெண்டு அண்ணிங்க கூட நல்ல சமைப்பாங்க என்றும், நாங்க கூட்டு குடும்பம் என்றும் குடும்பத்தை பற்றி சிலாகித்து கூறுகிறான் கடைக்குட்டி கண்ணன். சினிமா குடும்பம் மாதிரி இருக்குதுங்க என்று கண்ணம்மா சொல்ல.. நாங்களும் ஒரு லாலா குடும்பம்தாங்க என்று ஒப்புக்கொள்கிறேன் கண்ணன்.

எப்படி வாழறீங்க?
பெரிய வீட்டில் கூட எங்களால் இப்படி கூட்டு குடும்பமா வாழ முடியுமா தெரியலை. இந்த வீட்டுக்குள்ளே எப்படிக் கூட்டு குடும்பமா வாழறீங்க... பார்க்கறதுக்கே சந்தோஷமா அதே சமயம் வியப்பா இருக்குன்னு புகழ்ந்து பேசுறான் அகிலன். அஞ்சலி இந்த வீட்டில் எப்படி தங்கறதுன்னு வழக்கம்போல குதர்க்கமா யோசிச்சுகிட்டு சாப்பிட பிடிக்காமல் உட்கார்ந்து இருக்கா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications