அடக் கொடுமையே.. பிக்பாஸ் சீசன் எல்லாமா மறு ஒளிபரப்பு செய்வாங்க?
சென்னை: கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் காலம் வந்தாலும் வந்தது... மறு ஒளிபரப்பு என்று தொலைக்காட்சிகள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியலை... சில நிகழ்ச்சிகள் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும்...சிலவற்றை ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியாது.
லாக்டவுன் அமலில் உள்ள நேரத்தில் தொலைக் காட்சிகள் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன. விஜய் டிவியில் மகாபாரதம் மறு ஒளிபரப்பு .. இந்த சீரியலை மக்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.
இதே வரிசையில் விஜய் டிவி நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது வீட்டில் அடைபட்டு கிடந்த அந்த நேரம் என்ன நடந்தது என்பதை காண்பிக்கும் நிகழ்ச்சி... இதை எல்லாமா விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்யும் என்கிற கேள்வியை ரசிகர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன்
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த மூன்று வருடங்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் ஜூன் அல்லது ஜூலை முதல் பிக்பாஸ் சீசன் 4 துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கோவிட் 19 தொற்று பயம் காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நடக்குமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3
இந்த நிலையில்தான் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்யத் துவங்கி உள்ள விஜய் டிவி, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியையும் மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு வீட்டில் சேர்ந்து வாழும் மனிதர்களின் மன நிலை எப்படி இருக்கும்...ஒற்றுமை எப்படி இருக்கும்..சண்டை..சச்சரவுகள் என்ன என்று இவைகளை எல்லாம் நடப்பதை நடப்பது மாதிரி காண்பிக்கும் ஒரு நிகழ்ச்சி.

காதல் கோபம்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஹைலைட்டே வனிதா விஜயகுமார் மற்றவர்களை தட்டி கேட்பது.. இதனால் வரும் சண்டைகள்.. கோபம் .. அழுகை இதெல்லாம்தான். இவற்றை திரும்பிப் பார்க்க யாருமே விரும்ப மாட்டார்கள். அந்த நிமிடத்தோடு முடிந்து போன நிகழ்வுகள் அது. அதை மறு ஒளிபரப்பு செய்வது என்பது நியாயமாக இருக்குமா?

காதல் தோல்வி
கவினை முதலில் அபிராமி காதலிப்பார். கவின் சாக்ஷியை காதலிப்பார். அபிராமி முகேனை காதலிப்பார். கவின் அடுத்து லாஸ்லியாவை காதலிப்பார். அவரும் கவினை பதிலுக்கு காதலிப்பார். சேரனை அப்பா அப்பா என்று லாஸ்லியா அழைத்து வந்தார். வெளியில் வந்த பின்னர் இந்த காதலும் நீடிக்கவில்லை...பாசமும் நீடிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்கையில், இவைகள் நிறைந்து இருக்கும் இந்த உண்மை நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புவது சரியாக இருக்குமா? யார் மனமும் புண்படாது என்பதற்கு விஜய் டிவி உத்திரவாதம் தருமா?

மது சரவணன்
காமெடி நடிகை மது, நடிகர் சரவணன் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம் செய்யப் பட்டார்கள். இருவர் மீதும் ஒரு ஒரு குறை குற்றம் வைத்து வெளியேற்றப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் மனம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பும்போது புண்படாதா? நடிகை ஷெரீன் இன்றுவரை காதலர்களை பிரித்தார் என்கிற சாடலுடன் இருக்கிறார். இந்த நிலையில்...
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications