திருந்திட்டாங்க விஜய் டிவி.. சூப்பர் சிங்கர் சீசன் 10 செம கெத்து! பாடல்களும் சுற்றுகளும் செம ஃபிரெஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 10 வது சீசன் முந்தைய சீசன்களை விட புதுமையாகவும், வித்தியாசமான பாடல்களுடனும் இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நீயா நானா, கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர், சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என பல்வேறு நிகழ்ச்சிகளை கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறது விஜய் டிவி. இதில் அறிமுகமான பலர் இன்று திரையுலகில் ஜாம்பவான்களாக மிளிர்கின்றனர். இதில் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பாடகர்களாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில சீசன்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரே பாடல்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும், சுற்றுகளிலும் புதுமை இல்லை என்றும் விமர்சனம் இருந்து வந்தது.

Vijay TV Super Singer 10th season received appreciation which is better than previous seasons

இந்த நிலையில் இந்த சூப்பர் சிங்கர் 10 வது சீசனில் பல புதுமையான பாடல்கள் பாடப்படுவதுடன் வித்தியாசமான சுற்றுகள் வைக்கப்படுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து பாரி என்ற எழுத்தாளர் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, "ஒரு காலத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகனாக இருந்து, பிறகு அத்தனை இண்ட்ரஸ்ட் இல்லாமல், ஒரே டெம்ப்ளேட்டில் சுழல்கிற உணர்வில் பார்ப்பதை விட்டுவிட்டேன்.

ஒரு முப்பது பாடல்களையே திரும்ப திரும்ப எல்லா சீசனிலும் பாடிக் கொண்டிருந்தது அயற்சி வர முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இதை பலரும் சொல்லியிருப்பார்களோ என்னவோ, இந்த சீசனில், தேய்ச்ச ரெக்கார்டையே தேய்க்காமல் இதுவரை இந்த மேடைக்கு வராத பாடல்களாக எடுக்கிறார்கள். குறிப்பாக, 90 களின் பாடல்கள் நிறைய வருகின்றன. விஜயகாந்த் அவர்களுக்கு ட்ரிப்யூட் செய்ய ஒரு சுற்று வைத்திருந்தார்கள். அதில் கேப்டன் பிரபாகரன் படத்தின் 'பாசமுள்ள பாண்டியரே' பாடலை பாடி இருந்தார்கள்.

பாடியவர்களை விடுங்கள், அந்த ஆர்கஸ்ட்ரேஷன் , என்ன ஒரு மேஜிக் அந்த மேடையில் கிரியேட் செய்தது.. ரோமாஞ்சனம் மொமண்ட்.. கார்த்திக் என்றொரு கீபோர்ட் பிளேயர் இருப்பார், ரொம்ப அமைதியான பையன் தோற்றத்தில் இருப்பார். பாசமுள்ள பாண்டியரே பாடலுக்கு வாசிக்கும் போது அவரே ஆடிக்கொண்டே வாசித்தார்.. செம vibe. இப்படியான நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல்களைக் கேட்கும்போதுதான், ராஜா செய்து வைத்திருக்கும் நகாசு வேலைகள் எல்லாமுமே தெரிந்து ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தப் பாடலில் 'கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து' என்கிற கோரஸ் வருவதற்கு முன்பாக ஒரு பீட் வந்த போது. ஒரு பாட்டுக்குள்ள எத்தன வேரியேஷன்ஸ், டைமென்ஷன். என்னா மூளைய்யா ராஜாவுக்கு என்று மெய் மறந்து.. அவர் காலத்தில வாழ நாம் கொடுத்து வைத்தவர்கள் உணர்வோடு பார்த்து முடித்தேன். இந்த சீசனில் இந்த வாரம்கூட 'ஒருநாளும் உனை மறவாத;, 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என 90களின் பாடல்கள் நிகழ்ச்சியை களை கட்ட வைத்தன. இந்த சீஸன் போட்டியாளர்களும் நல்ல திறமையானவர்களாக இருக்கிறார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+