அடுத்து ஹேமாவை வச்சு பங்ஷனுக்கு ரெடி பண்ணிட்டாங்க விஜய் டிவி!
சென்னை: நாளுக்கு நாள் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டிவி முதலிடத்தில் இருந்தாலும் பல வித்தியாசமான பங்க்ஷன்களை வைப்பதிலும் இவர்கள் வித்தியாசமாக தான் இருக்கிறார்கள்.
விஜய் டிவி பிரபலங்களின் திருமணங்கள் எங்கேஜ்மெண்ட் களை மேடைகளில் நடத்தி களை கட்டிக் கொண்டு இருந்த இவர்கள் தற்போது பாண்டியன் ஸ்டோர் ஹேமாவின் வளைகாப்பையும் தடபுடலாக செய்து வேற லெவல் வைரலாக்கப் போகிறார்களாம்.
திருமண முடிந்தாலே அனைவரும் எதிர்பார்ப்பது குழந்தை தான். அந்த குழந்தை வீட்டில் வந்ததும் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அந்த முகத்தைப் பார்த்ததும் மனது மாறி விடும். இது எல்லோருக்கும் இயல்பான ஒன்று தான். ஆனாலும் சிலரது வாழ்க்கையில் இது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.

புள்ளத்தாச்சி ஹேமா
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவாக நடித்துக்கொண்டிருக்கும் ஹேமாவிற்கு வளைகாப்பு பங்க்ஷன் எளிமையாக வீட்டில் நடந்து முடிந்தது. ஆனால் சீரியலிலும் அவர் கன்சீவ் ஆக இருப்பது போன்று சீன் இருப்பதால் சீரியலில் இதை விமரிசையாக வளைகாப்பு நடத்த முடிவு பண்ணி இருக்கிறார்கள்.
குழந்தை வயிற்றில் இருக்கும் போது புது துணி உடுத்தக் கூடாது, போட்டோ எடுக்க கூடாது என்று கிராமப்புறங்களில் பாட்டிமார்கள் சொல்லுவார்கள்.

நிறைமாத கர்ப்பம்
ஆனால் அதெல்லாம் இப்போ பழைய கதையாகி விட்டது. நிறைமாதமாக இருக்கும்போதுகூட சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் ஹேமாவிற்கு இது தலை பிரசவம் .அம்மாவாக போகிறார். பூரிப்பு அவரது முகத்தில் இருந்தாலும் இந்த சீரியலில் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு முக்கியமான காரணம் சீரியலிலும் அவர் கர்ப்பமாக இருப்பது அவருக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது.

அப்ப சேட்டை.. இப்ப சமத்து
இந்தச் சீரியலில் இவர் அறிமுகமாகும்போது பணக்கார வீட்டில் வளர்ந்து வந்ததால் இந்த கூட்டு குடும்பம் அதற்குள் இருக்கும் கஷ்டங்களுக்கும் யாருடனும் ஒட்டாமல் கொஞ்சம் பிரச்சினை பண்ணிக்கொண்டு இருந்தார். அப்போ எல்லா பெண்களும் இவரை திட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. இப்போ இவர் அனைவரிடமும் பாச மழையை பொழிகின்றார்.

தனம்தான் வளர்க்கணுமாம்
முதலில் தன் குழந்தையை கொடுக்கவே மாட்டேன் என் குழந்தை எனக்கு தான் என்று ஜீவாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர் தற்போது குழந்தையை பெற்று தருவது மட்டும் தான் எனது வேலை மீதி எல்லாமே நீங்க தான் பாத்துக்கணும் என்று தனத்திடம் உரிமையாக கூறிவருகிறார். இது இந்த சீரியலில் ரசிகர்களுக்கு பெரும் மாற்றமாக இருந்தாலும் இவர் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டுக்குள் அங்கமான மீனா
இந்த கதை பல படங்களிலும் சீரியல்களிலும் இதற்கு முன்பு வந்தாலும் இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு கதையை பார்ப்பது ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கிறதாம். அதனால்தான் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னேறி வருகிறது. இந்த சீரியலில் கதிர் -முல்லை ஜோடி பிறகு இப்போ மீனா கேரக்டரும் ரசிகர்களிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. எப்பவும் சண்டை போட்டுக் கொண்டிருந்த மீனாவின் மாற்றம் வீட்டில் இருப்பவர்களையும் ரசிகர்களையும் புல்லரிக்க வைத்து இருக்கிறதாம். அதனாலேயே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூடி வருகின்றனர்.

வளைகாப்பு அமர்க்களம்
பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரும் வெள்ளிக்கிழமை இந்த சீரியல் 3 மணிநேரம் ஒளிபரப்பப்படுகிறது என்று கூறியிருக்கிறார்கள். அதுவும் மீனாவின் வளகாப்பு தடபுடலாக நடக்கப்போகிறது என்றும் கூறியிருக்கிறார்கள். இந்த வளைகாப்பு பங்ஷனுக்கு இந்த சீரியலில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு கலக்க போகிறார்கள்.

வெள்ளிக்கிழமை வளைகாப்பு
வெள்ளிக்கிழமை 3 மணிநேரம் அனைத்து சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் இந்த சீரியலில் ஒன்றாக பார்க்கலாம். அதோடு ஆட்டம் பாட்டத்தோடும் களை கட்ட போகிறார்களாம் . விஜய் டிவி ப்ரோமோ வில் சூப்பர் சிங்கர் ஜோடிகளான செந்தில் பாலாஜி மற்றும் ராஜலட்சுமி இந்த பங்ஷனுக்கு கலந்து கொள்வது போன்று போட்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிகர் நடிகைகளும் ஈரமான ரோஜாவே டீமும் செம ஆட்டம் போட்டு போட்டோஸ் களும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

நல்லபடியா பிறக்கட்டும்
உண்மையிலேயே ஹேமாவின் குழந்தைக்கு நல்ல வரவேற்பு தான் கிடைத்து கொண்டு இருக்கிறது. பலர் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி சினிமாவில் கலக்கி இருக்கிறார்கள். ஆனால் பிறக்கப் போகும் குட்டிக் குழந்தை அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே இருக்கும்போது இந்த அளவிற்கு பாப்புலராகி இருப்பது இவரின் குழந்தையாக தான் இருக்கும். சந்தோஷமா பெத்துட்டு வாம்மா ஹேமா!.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications