சங்கீதா சங்கடப்பட மாட்டாங்களா? விஜய், திரிஷா கோவா போயே ஆகணுமா? விஜயகாந்த் ஞாபகம் இப்ப வருது: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ற கவலைகூட விஜய்க்கு இல்லை.. ரசிகர்கள், குடும்பத்தினர், பெற்றோர், மனைவி, குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்ற அக்கறையும் இல்லை, கீர்த்தி சுரேஷ் தம்பதியை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்திருக்கலாமே" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Kingwoods News என்ற சேனலுக்கு சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "முன்னணி நடிகையாக வந்த மேனகா, குறுகிய காலத்திலேயே திருமணம் செய்து செட்டில் ஆயிட்டாங்க.. அதுபோல, கீர்த்தி சுரேஷூம் திருமணத்தை இளமைக்காலத்திலேயே செய்து கொள்வது சரியானதுதான். இப்படித்தான் எல்லா நடிகைகளும் இருக்க வேண்டும்.

trisha vijay keerthy suresh

திருமணம்: வயது மூப்பு அடைந்து, அடுத்த பெண்ணின் கணவரை ஆட்டைய போடாமல், இளம்வயதிலேயே திருமணம் செய்து கொள்வது நல்லதுதான். இன்னைக்கும் ஓரளவு மார்க்கெட் இருக்கும்போது, கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்வது பாராட்டத்தக்கது.. ஆனால், பல்வேறு வதந்திகளில் சிக்கினார் கீர்த்தி சுரேஷ்.. விஷாலின் அம்மா, அப்பா போய் கீர்த்தி சுரேஷை பெண் கேட்டதாக சொன்னாங்க.. அப்பகூட கீர்த்தி சுரேஷின் 15 வருட காதல் விவகாரம் வெளியே வரவில்லை.

விஜய் உட்பட கீர்த்தி சுரேஷ் பற்றி பல விமர்சனங்கள் வந்தது, அப்போதெல்லாம்கூட இதை சொல்லி இருக்கலாம். அன்பு பரிமாற்றத்துக்கு ஒரு நாள் இருந்தாலே போதும்.. ஆனால் இவர்களின் 15 வருட காதல் என்பது நம்புற மாதிரியா இருக்கு?

மொய்க்கவர்: விஜய் ஏன் திருமணத்துக்கு கிளம்பி போனாரு? பனையூருக்கு அல்லது தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து சாம்பார், ரசம், கூட்டு என சாப்பாடு போட்டு, ஆயிரம் ரூபாய் மொய்க்கவரில் வைத்து தந்திருக்கலாமே. அல்லது கீர்த்தி சுரேஷூக்கு வைர நெக்லஸை, தந்திருக்கலாமே.. அந்த வைர நெக்லஸை புஸ்ஸி ஆனந்தோ அல்லது வேறு யாரிடமாவது தந்திருக்கலாமே? எஸ்ஏசி இதெல்லாம் கேட்கவா போறாரு? ஏற்கனவே கேட்டுதான் எஸ்ஏசிக்கு இந்த நிலைமை..

இங்கே புயல் அடிச்சு வெள்ளம் வந்திருக்கு.. வெள்ளத்தில் மக்கள் அவஸ்தைப்பட்டுட்டு இருக்காங்க.. மக்களை விட்டுட்டு, கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு போயி ஆண்டனி கூட நின்னு போட்டோவுக்கு போஸ் தந்துட்டு இருக்கார்.

trisha vijay keerthy suresh

வாழ்த்து செய்தி: விஜய்யின் 50வது பிறந்தநாளுக்கு Love for ever என்று திரிஷா வாழ்த்து போஸ்ட் போட்டபோதே , அதை நான் கண்டித்திருந்தேன். இதனால் விஜய் குடும்பத்தில் சலசலப்பு வராதா? விஜய் மனைவி சங்கீதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா?
மன்சூர் அலிகானுடன் அப்பதான் பிரச்சனை நடந்து முடிந்திருக்கு, அதுக்குள்ளேயே இப்படி ஒரு போஸ்ட் போட்டால் எப்படி? ஏற்கனவே லியோ படத்தில் லிப்லாக் தந்ததால், குடும்பமே பிரிந்து சென்றுவிட்டதாக ஒரு பேச்சு இருக்கும்போது, இப்படி வாழ்த்து போஸ்ட்டை திரிஷா போடலாமா?

கோட் படத்தில் குத்தாட்டம் போடறதுக்கு திரிஷாவை தவிர வேறு யாருமே இல்லையா? தன்னுடைய குடும்பத்தின் மீதோ, மனைவி மீதோ விஜய்க்கு பாசமே இல்லை. ஒரு அரசியல் கட்சியை இப்போது தொடங்கியாச்சு,. ஏற்கனவே மக்களை சந்திக்கவில்லை என்ற சர்ச்சை உள்ளது. இந்த நேரத்தில் கல்யாணத்துக்கு கோவா வரைக்கும் போகிறோமே? என்பதை கூட விஜய் நினைக்கவில்லை

அம்பானி திருமணம்: எப்படி இவரையெல்லாம் ஒரு தலைவர் என்று மக்கள் சொல்கிறார்கள்? அம்பானி கல்யாணத்தில் கலந்துக்க முடியாதபோது, கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் மட்டும் விஜய்யால் கலந்துக்க முடியுதே எப்படி? பொதுவாழ்க்கைக்கும் விஜய்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால், ஏதாவது ஒரு விஷயத்தை தியாகம் செய்தெ ஆகணும்..
ஆனால், இவருக்கு அடிப்படை அரசியல் இல்லை, அரசியல் அறிவும் இல்லை..

மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ற கவலைகூட விஜய்க்கு இல்லை.. ரசிகர்கள், குடும்பத்தினர், பெற்றோர், மனைவி, குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்ற அக்கறையும் இல்லை. இந்த இடத்தில்தான், விஜயகாந்த்தை நாம நினைச்சு பார்க்கணும். அதுக்காக விஜயகாந்த்துடன் விஜய்யை ஒப்பிட முடியாது. அப்படி விஜயகாந்த்துடன் விஜய்யை ஒப்பிடுவதே, வாழ்நாளில் நாம் செய்யும் மிகப்பெரிய பாவம் என்பேன்.. எம்ஜிஆருடன் ஒப்பிட்டால் அதுவும் பாவம்தான்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+