நடிகர் தாடி பாலாஜி ஓபனா சொல்லிட்டாரு.. பவர்ஃபுல் விஜய்.. ஜனவரி 27தேதி இதுதான் நடக்கபோகுது! வேற லெவல்
சென்னை: தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் தயாராவதை போலவே, விஜய்யின் தவெக -வும் மும்முரமாகி வருகிறது. சமீபத்தில் மாநாட்டை நடத்தி முடித்திருந்த விஜய், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி கொண்டிருக்கிறது. கூட்டணிக்கான அறிவிப்பை தன் மாநாட்டிலேயே போட்டுடைத்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கூட்டணி: திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் உள்ள கட்சிகளுக்கும், கூட்டணியிலிலேயே இடம்பெறாத தனி கட்சிகளுக்கும், "வலையை" விரிக்க போவதாகவும் தெரிகிறது. எனவே தவெக-வை இப்போதே பலத்துடன் கட்டமைக்கும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.. அத்துடன் தேர்தலை சந்திக்கக் கூடிய அளவில், ஏராளமான அரசியல் வியூகங்களையும் வகுத்து வருகிறார்.
அந்தவகையில், மாநிலம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மாவட்டந்தோறும் செல்லும் விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கி, ஆலோசனை மேற்கொள்வதாக தெரிகிறது. இதற்காகவே மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம், பொதுக்கூட்டம், நல உதவிகள் நிகழ்ச்சிகள் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாம்.
சுற்றுப்பயணம்: சுற்றுப்பயணத்துக்காகவே, சிறப்பு வசதிகளுடன் வாகனம் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணத்தை, நடிகர் தாடி பாலாஜி உறுதி செய்துள்ளார்..
இதுகுறித்து தாடி பாலாஜி சொல்லும்போது, நடிகர் விஜய் வரும் ஜனவரி 27 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார். எல்லாமே விஜய்யின் முடிவு தான். விஜய் எது சொன்னாலும் பவர்ஃபுல்லா இருக்கும். ஒன்னு சொன்னாலே அது பெரிசாயிடுது. ஜனவரி 27 ம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க போவதாக உள்ளே பேசிக்கிட்டாங்க..
சுற்றுப்பயணம்: தேர்தலை முன்னிட்டு நிறைய தலைவர்கள் சுற்றுப்பயணம் போவதை போல விஜய்யும் சுற்றுப்பயணம் செல்ல போகிறார். ஆனால், மற்ற தலைவர்களின் சுற்றுப்பயணத்தை விடவும், விஜய்யின் சுற்றுப்பயணம் வேற லெவலில் இருக்கும். அதில் ஒரு ஃபயர் இருக்கும். கவலையே படவேண்டாம். சுற்றுப்பயண பணிகளில் எனக்கான அழைப்பு வந்தால், நிச்சயம் செய்வேன். விஜய் சந்தோஷப்படுகின்ற அளவுக்கு சிறப்பாக செய்வேன். அதனால் என்னை அவர் நிச்சயமாக அழைப்பார் என்று நம்புகிறேன்.
நிர்வாகிகள், தொண்டர்கள் என எல்லாரும் ஒற்றுமையாக இருந்தாலே, 2026ல் ஆட்சியை பிடிக்க முடியும். நம்ம தலைவரையும் அரியணையில் அமர வைக்க முடியும்" என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்..
புதிய நிர்வாகிகள்: இதனிடையே, தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.. அதேபோல, மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்ததுடன், அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளையும் வழங்க போகிறாராம். அந்தவகையில், மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
அதேபோல, தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications