என்னை காப்பாத்துனது விஜயகாந்த் தான்! வீட்டுக்கு வந்த 10 பேரு! ஒரே போனில் முடிந்த சம்பவம்! நெகிழ்ந்த நடிகர் ஷாம்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மனிதநேயம் குறித்துப் பலரும் பேசியிருக்கிறார்கள். அதிலும், தனக்கு உதவி கேட்டு வந்தவர்களை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை. அப்படி, ஒரு நடிகர் தனது சம்பளப் பிரச்சனைக்காக விஜயகாந்திடம் உதவி கேட்டபோது, விஜயகாந்த் செய்த செயல், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஷாம் யார்
சினிமா பயணம்: நடிகர் சாம், தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகர். ஆரம்பத்தில், துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தனது கடின உழைப்பால் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். ஷாம், சில வருடங்களுக்கு முன்பு வெளியான வாரிசு உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜயகாந்தின் மனிதநேயம்
ஒருமுறை, ஷாம், தனது சினிமா சம்பளப் பிரச்சனை காரணமாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போது, அவருக்கு வேறு வழியே தெரியவில்லை. அவர் விஜயகாந்திற்கு போன் செய்து, "சார், என்னைக் காப்பாத்துங்க," என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட விஜயகாந்த், "ஏன் என்னாச்சு? என்ன நடந்தது?" என்று கேட்டு, ஷாம் சொன்ன கதையைக் கேட்டார்.
அதற்கு இஷாம் சம்பள பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் 10 பேரை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்காரு என்று சொன்னாராம். அதற்கு விஜயகாந்த், "நீ போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்துவிட்டு வீட்டில் நிம்மதியா தூங்கு. இனிமே எந்தப் பிரச்சனையும் வராது," என்று போனை வைத்தாராம். பிறகு பிரச்சனை பண்ண ஆள் அனுப்புனவருக்கு போன் செய்து இனிமே இது ஷாம் பிரச்சனை இல்ல என்னோட பிரச்சனை என்று கொஞ்ச நேரத்தில் அந்த பிரச்சனையை முடித்து வைத்தாராம். இதுகுறித்து ஷாம் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜயகாந்த் குறித்த பிற பிரபலங்கள்
விஜயகாந்த் குறித்துப் பேசிய பல பிரபலங்கள், அவரது மனிதநேயத்தைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த், "விஜயகாந்த் ஒரு தங்கமான மனுஷன். அவருக்கு எந்தப் பிரச்சனையும் வராது," என்று கூறியிருந்தார் அதுபோல விஜயகாந்த் மறைவு வந்த பிறகு இந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை விஜயகாந்த் என்றாலே கம்பீரம் அவர் இல்லை என்பதை என் மனது எப்போதுமே ஏற்றுக் கொள்ளாது என்று உருக்கமாக பேசி இருந்தார்.
விஜயகாந்த் மறைவு
அதுபோல சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களை தனக்கு மேலே பிரபலமாக்கி அழகு பார்த்தவர் விஜயகாந்த் அதற்கு உதாரணமாக நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை சொல்லலாம். ஆரம்பத்தில் விஜய் மற்றும் சூர்யா இருவருக்காகவும் அவர்களுடைய திரைப்படங்களில் நடித்து அவர்களை பிரபலப்படுத்துகிறது விஜயகாந்த் தான்.
விஜயகாந்த் நடிகர் ஷாமுக்கு செய்த செயல், ஒரு கலைஞனுக்குக் கிடைத்த மரியாதையாகப் பார்க்கப்படுகிறது. அவர் உடல்நலக் குறைவால் இறந்தாலும், அவரது மனம், இன்னமும் பல கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையாக இருக்கிறது என்பது உண்மை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications